ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இயக்குனர் அவதாரம் எடுத்த 5 டாப் ஹீரோக்கள்.. பவர் பாண்டியால் காணாமல் போன தனுஷ்

பொதுவாகவே சினிமாவில் இருக்கக்கூடிய நடிகர்கள் தங்களது படங்களில் நடிப்பதையும் தாண்டி பல்வேறு அவதாரங்களையும் எடுத்து வருகின்றனர்.  அதிலும் சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர்கள் தாங்கள் நடித்த படங்களின் மூலம் இயக்குனர்களாகவும் அவதாரம் எடுத்துள்ளனர். அப்படியாக நடிப்பையும் தாண்டி இயக்குனராகவும் முத்திரை பதித்த 5 நடிகர்களை இங்கு காணலாம்.

அர்ஜுன்: தனது படங்களில் அதிக சண்டை காட்சிகளில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் நடிகர் அர்ஜுன். அதிலும் தேசப்பற்று மிகுந்த படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடியவர் ஆவார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகவே அமைந்தது. அது மட்டுமல்லாமல் ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, ஏழுமலை, சுயம்வரம் போன்ற படங்களின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

Also Read: யாரும் வராததால் பல கோடிகளை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்.. வாழ்நாளில் அதிக சம்பளம் வாங்கிய அர்ஜுன்.!

சரத்குமார்: தனது படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர்தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். அதன் பின்னர் சூரியன் என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தனது நூறாவது படமான தலைமகன் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் மாஸ் காட்டி வருகிறார்.

சிம்பு: கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகர் சிலம்பரசன். தற்பொழுது சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் 2006 ஆம் ஆண்டு வெளியான வல்லவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இதில் ரீமா சென் உடன் இவர் நடித்த காட்சிகள் இன்றளவும் பிரபலமான ஒன்றாகவே இருந்து வருகிறது. 

Also Read: சிம்பு படம் தள்ளிப்போனதற்கு உதயநிதி தான் காரணம்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

கமல்ஹாசன்: தனது படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் உலக நாயகன் கமலஹாசன். இவர் தற்பொழுது டாப் நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டுள்ள இவர் விஸ்வரூபம், மருதநாயகம், விருமாண்டி போன்ற படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

தனுஷ்: தற்பொழுது தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட்டிலும் மாஸ் காட்டி வருபவர் தான் நடிகர் தனுஷ். தன்னுடைய படங்களில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் திறமையான நடிப்பினை வெளிப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி என்னும் படத்தினை இயக்கியும் இருந்தார். அதிலும் இளமையில் தொடங்கிய காதலை முதுமையில் நினைத்து அசைபோடும் கதையினை மையமாக வைத்து இப்படமானது அமைந்திருந்தது. 

Also Read: ஊருக்கு தான் நா உத்தமன்.. நண்பனின் குடும்பத்தை நடுரோட்டிற்கு கொண்டு வந்த தனுஷ்

- Advertisement -

Trending News