வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

குணசேகரனை நடுரோட்டில் அவமானப்படுத்திய ஜான்சி.. தம்பி காலில் விழுந்து கும்பிட்ட பரிதாபம்

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு தான் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒரு சில மாதங்களாகவே ஆதிரையின் திருமணத்தை வைத்து ஜவ்வு மாதிரி இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. எப்படா இந்த விஷயங்கள் எல்லாம் முடித்து அடுத்த கட்ட காட்சிகள் வரும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிச்சயதார்த்த வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த திருமணத்தை வைத்து ஆளுக்கு ஆள் ஒரு பிளான் போடுகிறார்கள். ஒரு பக்கம் குணசேகரன் 40% சொத்துக்காக ஒரு பிளான் மற்றோர் பக்கம் இவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திற்காக எஸ்கேஆர் தம்பி ஒரு பிளான், இந்த திருமணத்தை ஆதிரை நினைத்தபடி நடத்தி வைக்க வேண்டும் என்று அப்பத்தா கமுக்கமாக போடும் ஒரு பிளான், அடுத்ததாக குணசேகரன் வீட்டில் எப்படியாவது சம்மந்தி ஆக வேண்டும் என்று ஜான்சி ராணியின் திட்டம் இதற்கிடையில் குணசேகரனிடம் இருந்து அந்த வீட்டில் இருக்கும் பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று போராடும் ஜனனி. இப்படி இவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு விஷயத்தை வைத்து ஒரு திட்டத்தை தீட்டி வருகிறார்கள்.

Also read: எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

ஆனால் குணசேகரன் பிளான் அப்பட்டமாக வெளியே தெரிவதற்கு முக்கிய காரணமாக இருந்தது கதிர் என்றே சொல்லலாம். இவர் பெயரில் இருக்கும் சொத்தை ஆதிரை பெயருக்கு மாற்றப் போகிறது என்ற கோபத்தில் கதிர் கண்ணுமுன்னு தெரியாமல் குடித்துவிட்டு கரிகாலனிடம் எல்லா விஷயங்களையும் போட்டு விடுகிறான். இதை கேட்ட கரிகாலன், ஜான்சிராணி இடம் சொன்ன பிறகு இரண்டு பேரும் குணசேகரன் இடம் நியாயத்தை கேட்க வேண்டும் என்று கிளம்புகிறார்கள்.

குணசேகரன் வரும் காரை நடுரோட்டில் மறைத்துக் கொண்டு ஆவேசத்தின் உச்சகட்டமாக கோபத்தை வெளிக்காட்டுகிறார். இவரை சமாளிக்கும் விதமாக இவர்களிடம் ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜனனி இவரை பார்த்து விட்டு வீட்டிற்கு விரசலாக செல்கிறாள். பிறகு குணசேகரனின் ரூம் கதவை தொடர்ந்து தட்டிக் கொண்டு அவரை வெளியே கூப்பிடுகிறார்.

Also read: பருத்தி முட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம்.. டைட்டில் வின்னர் ஆகியும் பத்து பைசா பிரயோஜனம் இல்லாத 6 பேர்

அவர் வெளியே வந்து என்னம்மா உனக்கு வேணும் எதுக்கு இப்படி வந்து கூப்பிடுற என்று கேட்க அதற்கு ஜனனி நீங்க, கரிகாலன் மற்றும் ஜான்சி கூட என்ன பேசிக் கொண்டு இருந்தீங்க ஏன் பேசினீங்க என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் நீ என்ன கண்ணால பார்த்தியா என்று கேட்க ஆமா அப்படின்னு சொன்ன பிறகு ஏதோ சமாளிக்க வேண்டும் என்பதற்காக கதிர் குடித்துவிட்டு கரிகாலனிடம் ஏதோ உளறி இருக்கிறான்.

உடனே கோபப்பட்டு என் காரை வழி மறைத்து நியாயம் கேட்க அவங்களை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். இதுக்கு மேலேயும் உனக்கு நம்பிக்கை வரலேன்னா அந்த குடிகார பையன் கதிர கூப்பிடு அவனிடம் எல்லாத்தையும் கேட்கிறேன். பிறகு கதிரிடம் குணசேகரன் கேட்க அவர் போதையில் இருந்ததால் எதுவும் சொல்லாமல் நின்றதால் அவர் காலில் விழுந்து உன்னை நான் கும்பிட்டு கேட்கிறேன் நீ கரிகாலனிடம் என்னத்த சொல்லித் தொலைச்ச என்று எல்லாரும் முன்னாடியும் சொல்லு என்று கெஞ்சி கேட்கிறார். இப்படியெல்லாம் குணசேகரன் கெஞ்சும் போது பார்க்க பரிதாபமாக இருந்தது. கடைசியில் இவருடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று அவரே புலம்பும் படியாக அமைந்தது

Also read: கதிரை மட்டம் தட்டிய குணசேகரன்.. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய நந்தினி

- Advertisement -

Trending News