சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

புலியே பயந்து பின்னாடி போனா அது புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. புல்லரிக்க வைத்த புஷ்பா 2 க்ளிம்ஸ் வீடியோ

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் இந்த படம் சர்வதேச அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் மிரட்டியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்ல புஷ்பா 2 படத்தின் புல்லரிக்க வைக்கும் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் திருப்பதி சிறையிலிருந்து தப்பித்து செல்லும்போது 8 தோட்டாக்களின் குண்டு பாய்ந்த நிலையில் புஷ்பா தீவிர காயம் அடைந்ததாக செய்திகள் பரவுகிறது. இதனால் அவர் தப்பித்து சென்ற அடர்ந்த காடுகளில் புஷ்பாவை வேட்டையாட ஒரு சிறப்பு படை களம் இறங்கி உள்ளது.

Also Read: அல்லு அர்ஜுனை ஓரங்கட்டிவிட்டு, ஷாருக்கானுக்கு பச்சை கொடி காட்டிய விஜய் சேதுபதி

அப்போது அவருடைய ரத்தக்காயம் படிந்த சட்டையை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அந்தச் சட்டையில் 8 தோட்டாக்களின் துளை இருப்பதையும் போலீசார் பொதுமக்களிடம் காட்டுகிறார்கள். இதனால் அவர் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறியதால் அப்பகுதியில் கலவரம் வெடிக்கிறது.

கோபத்தில் புஷ்பாவின் ஆதரவாளர்கள் வன்முறையை கையில் எடுத்து கடைகளை உடைத்தும், எரித்தும் கொண்டிருக்கின்றனர். மேலும் புஷ்பா அரசாங்கத்திற்கு எதிராக மரத்தை கடத்தி தவறான வழியில் சம்பாதித்தாலும் அந்த பணத்தை பொதுமக்களுக்காக பயன்படுத்தி இருக்கிறார்.

Also Read: பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா

ஏழைகளின் மருத்துவ செலவிற்கும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்தும், வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தும் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இவ்வளவு செய்த புஷ்பாவிற்காக பொதுமக்கள் ஒன்றாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஒரு மாதமாக கலவரம் தொடர்வதால் பெரும்பாலான பகுதியில் ஊரடங்கையும் அமல்படுத்தினர்.

மறுபுறம் புஷ்பா உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் ஜப்பான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் புஷ்பாவை கொன்று புதைத்து விட்டு போலீஸ் நாடகமாடுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு தோன்றுகிறது. உண்மையில் புஷ்பா எங்கே? என பெரும் பரபரப்பை கிளப்புகிறது.

Also Read: 2023ல் வெளிவர இருக்கும் 10 ஹிட் படங்களின் 2-ம் பாகம்.. பொன்னியின் செல்வன் முடிவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

கடைசியில் புலிகளை கண்காணிப்பதற்கான கேமராவில் காட்டு விலங்குகள் எல்லாம் 2 அடி பின்னாடி வச்சா, புலி வந்திருச்சின்னு அர்த்தம். அந்தப் புலியே இரண்டடி பின்னாடி வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம் என்ற பஞ்ச் டயலாக் உடன் அல்லு அர்ஜுன் புலியை விட ஆக்ரோஷமாக தெரிகிறார். இந்த க்ளிம்ஸ் வீடியோவை பார்த்த பலருக்கும் புல்லரித்து போனது. முதல் பாகத்தை போலவே புஷ்பா 2-வும் தாறுமாறாக இருக்கப் போகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

புஷ்பா 2 படத்தின் டிரைலர் இதோ!

Trending News