சூப்பர் ஸ்டார்- லோகேஷ் கூட்டணிக்கு வலு சேர்க்கும் பிரபல இசையமைப்பாளர்.. கடும் போட்டி போடும் தயாரிப்பாளர்கள்

ரஜினி லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ரஜினி லோகேஷை கூப்பிட்டு சந்தித்தார். அப்போது லோகேஷ் சொன்ன ஒன்லைன் ஸ்டோரி சூப்பர் ஸ்டாருக்கு பிடித்து விட்டதால், இதை பண்ணி விட வேண்டும் என்று ரஜினிக்கு தோன்றியது.

அதற்கேற்றார் போல் இந்த படம் அனிருத்தால் வேகமாக வளர்ந்து வருகிறது. இவர் எடுக்கும் முயற்சியால் மட்டுமே ரஜினியும் லோகேஷ் கனகராஜும் இணைகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு துவங்க லோகேஷ் பிளான் போட்டு இருக்கிறார்.

இந்த படத்தை யார் தயாரிப்பது என்பதில் தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரிக்க திட்டம் தீட்டி வருகிறார். லோகேஷ் கனகராஜ் மூலம் அவர் முயற்சி செய்து வருகிறார். ஆனால் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க ஆர்வமாக இருக்கிறது. 

அண்ணாத்த, ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக தற்போது இந்த படத்தையும் முயற்சி செய்து வருகிறார்கள். ரஜினியும் சன் பிக்சர்ஸ் தயாரித்தால் நன்றாக இருக்கும், காரணம் அவர் கேட்கும் சம்பளத்தை அவர்கள் கொடுப்பார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் சுதந்திரமாக செயல்பட முடியாது என்ற காரணத்தினால் சன் பிக்சர்ஸ் தயாரிக்க வேண்டாம் என்று கூறி வருகிறாராம். 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு ஜெய் பீம் இயக்குனர் டிஜே ஞானவேல் படத்தை  முடித்துவிட்டு, அதன் பிறகு தான் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. 

இதற்கிடையில் இந்த படத்தை லலித் அல்லது சன் பிக்சர்ஸ் இருவருள் யார் தயாரிக்கப் போகின்றனர் என்பது உறுதியான பிறகு தான். ரஜினி- லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். இதற்கெல்லாம் இன்னும் நாட்கள் அதிகம் இருப்பதால் இதைப்பற்றி நல்ல முடிவு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.