வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஆல் ரவுண்டராக 75 படங்களில் கலக்கிய தனி குரலுக்கு சொந்தக்காரர்.. ரஜினியை வம்பிழுக்கும் அந்த நடிகர்

பல படங்களில் அந்த நடிகரை பார்த்தும் கூட, இன்றும் அவர் பெயர் பல பேருக்கு தெரியாது. ஆனால் அவர் மிகப் பிரபலமான ஒரு ஆர்ட்டிஸ்ட். சுமார் 75 படங்களில் கௌரவ வேடங்கள், வில்லன், போலீஸ் அதிகாரி என சர்வ சாதாரணமாக அனைத்து கதாபாத்திரங்களிலும் ஆல் ரவுண்டராக கலக்கி விடுவார்.

இப்பொழுது கடந்த ஒரு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. 1987 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான மாபெரும்  வெற்றி பெற்ற ‘நாயகன்’ படத்தின் மூலம் வில்லனாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ராஜா கிருஷ்ணமூர்த்தி.

Also Read: விஜய், தனுஷை போல ரூட்டை மாற்றிய ரஜினி.. அவ்வளவு அடி வாங்கியும் ஆசை யார விட்டுச்சு

இவர் சினிமாவில் நடிக்க துவங்கிய பிறகு தன்னுடைய பெயரை ‘கிட்டி’ என  மாற்றிக் கொண்டார். அதன் பிறகு இவரை பரவலாக கிட்டி கிருஷ்ணமூர்த்தி என்று அழைத்தனர். இவருடைய பெயர் பிரபலமாகா விட்டாலும் தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர். சொட்டையாக இருந்து பிரபலம் ஆகுவதை விட மொட்டையாக இருந்து பிரபலமானவர் தான் கிட்டி கிருஷ்ணமூர்த்தி.

இப்போது மொட்ட ராஜேந்திரன் எப்படி ஃபேமஸோ அந்த காலத்தில் கிட்டி கிருஷ்ணமூர்த்தி செம பேமஸ். அதிலும் இவர்  நடித்த எல்லா படங்களிலும் ரஜினியுடன் வம்பு செய்வார். குறிப்பாக தளபதி படத்தில் போலீசாக வந்து ரஜினியுடன் ரகளை செய்திருப்பார்.

Also Read: வெறி பிடித்து களத்தில் காத்திருக்கும் ரஜினி.. பின்னணியில் இருக்கும் 3 முக்கிய காரணங்கள்

அதேபோல் பாட்ஷா படத்திலும் போலீஸ் கெட்டப்பில் சூப்பர் ஸ்டாரை வம்புக்கு இழுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்திருப்பார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என திரையுலகில் பன்முகத் திறமை கொண்டவர். இவர் தசரதன், கிருஷ்ணா ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.

இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் கமல், ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் பட்டையைக் கிளப்பிய இவர், மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்ததால் பல்வேறு பிரபல நிறுவனங்களில் ஹெச்.ஆர் பிரிவில் உயர் பொறுப்புகளை வகித்தவர்.

Also Read: நடிகையுடன் ரகசிய திருமணம்.. இரவோடு இரவாக ரஜினியை கடத்தி செய்த விசாரணை

- Advertisement -

Trending News