காலைவாரி விட்ட ருத்ரன் வசூல்.. அடுத்து கல்லா கட்ட லாரன்ஸ் காத்திருக்கும் 3 முக்கிய படங்கள்

நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்த லாரன்ஸ் இப்போது முழு நேர நடிகராக மாறி உள்ளார். பெரிய நடிகர்கள் கூட கையில் இவ்வளவு படங்கள் வைத்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் லாரன்ஸ் கைவசம் எக்கச்சக்க படங்கள் இருக்கிறது. மேலும் சமீபத்தில் அவருடைய ருத்ரன் படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்நிலையில் ருத்ரன் படம் போட்ட வசூலை கூட எடுக்க முடியாமல் திணறி வருகிறது. அதுமட்டுமின்றி ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதை சரி கட்டுவதற்காக அடுத்தடுத்து லாரன்ஸின் மூன்று படங்கள் தயாராகி வருகிறது.

Also Read: பிரியா பவானி சங்கரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு.! பத்து தலக்கு பின் பல மடங்கு உயர்ந்த சம்பளம்

முதலாவதாக பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிப்பில் சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் முக்கால்வாசி படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மூன்று பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் மட்டும் படமாக்க வேண்டி உள்ளது.

மேலும் சந்திரமுகி 2 படத்தை வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படமாக சந்திரமுகி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரஜினியின் திரை வாழ்க்கையில் அதிக நாள் ஓடிய படம் சந்திரமுகி தான்.

Also Read: 1500 தியேட்டர்களில் வெளியான ருத்ரன்.. கல்லா கட்டியதா.? முதல் நாள் வசூல் இதுதான்

அந்த வகையில் லாரன்ஸுக்கும் சந்திரமுகி 2 படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மற்றொரு இரண்டாம் பாக படமான ஜிகர்தண்டா 2 படத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கிறது.

ஆகையால் அது முடிந்தவுடன் விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மேலும் முன்றாவதாக லாரன்ஸுக்கு ஹிட் படங்களை கொடுத்த காஞ்சனா பட வரிசையில் நான்காவது பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. இந்த படங்களின் மூலம் லாரன்ஸ் கல்லா கட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

Also Read: 4 வருட இடைவெளியை சரி கட்டினாரா ராகவா லாரன்ஸ்.? ருத்ரன் படம் எப்படி இருக்கு.? விமர்சனம்