வாரிசு படத்திற்குப் பிறகு தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமான லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் குழந்தைகள் முதல் இளசுகள் வரை விரும்பும் வகையில் இருக்கும் என்பது படத்தின் ப்ரோமோ வீடியோவை பார்த்ததும் தெரிந்துவிட்டது.
லியோ படத்திற்கு பின் அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க விஜய் ஒத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தெரிந்ததும், ‘தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கிறாரா வேண்டவே வேண்டாம்’ என அழுகாத குறையாய் தளபதி ரசிகர்கள் கெஞ்சி கேட்கின்றனர்.
ஏனென்றால் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்யின் வாரிசு படத்திலேயே தெலுங்கு வாடை அதிகமாக வீசியதால் சுத்தமாகவே பிடிக்கவில்லை. ஆனால் விஜய் நடிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அந்த படத்தை திரையரங்கில் வசூல் ரீதியாக சோடை போகாமல் பார்த்துக் கொண்டனர். இருந்த போதிலும் சோசியல் மீடியாவில் வாரிசு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
அதன் தொடர்ச்சியாக இப்போது மறுபடியும் தெலுங்கு இயக்குனருடன் குடும்ப சென்டிமெண்ட் படத்தில் விஜய் கைக்கோர்க்கிறார் என்ற செய்தி வெளியாகி அவருடைய ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கில் டாப் நடிகராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணாவை வைத்து வீர நரசிம்ம ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி தான் விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.
இயக்குனர் கோபிசந்த் மலினேனி நடிகர் விஜய்யிடம் கதையை கூறியதாகவும், அந்த கதை பிடித்துப் போனதால் விஜய் அந்த படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது விஜய் லியோ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், கோபிசந்த்- விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தைக் குறித்த
எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் இந்த விஷயத்தை கேட்ட தளபதி ரசிகர்கள் மீண்டும் மற்றொரு தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்க வேண்டாம். விஜய்யை மாஸ் ஹீரோவாகவே பார்க்க விரும்புகிறோம். அவர் ஆக்சன் படங்களில் நடிப்பது தான் பொருத்தமாக இருக்கிறது. முழுவதுமான குடும்ப சென்டிமெண்ட் கதை களத்தில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவிக்கின்றனர்.