புது டெக்னாலஜியைக் கொண்டு வித்தியாசமான அனுபவத்தை நம் கண் முன்னே கொடுத்த திரைப்படம் தான் அவதார். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் கடந்த வருட இறுதியில் வெளிவந்தது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படம் முதல் நாளிலேயே வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அந்த படத்திற்கான எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்களிடையே இருந்தது. அதை கொஞ்சம் கூட ஏமாற்றாமல் வெளிவந்த அவதார் 2 இப்போது வரை வசூலித்த மொத்த தொகையை கேட்டால் தலையே சுற்றிவிடும்.
Also read: 3 வருட அவெஞ்சர்ஸ் ரெக்கார்டை சுக்குநூறாக்கிய அவதார்-2.. மொத்த வசூல் கேட்டாலே தல கிறுனு சுத்துது
அந்த வகையில் உலகம் முழுவதிலும் வெளியான இந்த திரைப்படத்திற்கு பேராதரவு கிடைத்தது. மேலும் 7500 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே 3000 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இதன் வசூல் ஏறுமுகமாகவே இருந்தது.
இத்தனைக்கும் இந்த படத்திற்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்பட்டது. ஆனால் புதிய உலகத்தை ரசித்துப் பார்க்கும் ஆவலில் இருந்த ரசிகர்கள் டிக்கெட் விலையையும் பொருட்படுத்தாமல் படத்தை பார்த்து ரசித்தனர். அதுவே இந்த வசூல் வேட்டைக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது.
Also read: அவதார் டீமுடன் கூட்டணி போடும் சிவகார்த்திகேயன்.. இது என்னடா புது ஊருட்டா இருக்கு!
இப்படி ப்ளூ மனிதர்களை வைத்து நீரில் சாகசம் செய்த இந்த திரைப்படம் இப்போது வரை 20,000 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இது நிச்சயம் எதிர்பார்த்ததற்கும் மேலான வசூல் தான். அதை இயக்குனரே ஒருமுறை வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அதாவது இந்த திரைப்படம் வசூல் சாதனை புரியவில்லை என்றால் நான் அடுத்த பாகங்களை எடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
எந்த அளவிற்கு படத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அவர் இப்படி கூறியிருப்பார். அந்த நம்பிக்கையை சற்றும் பொய்யாக்காமல் அவதார் 2 திரைப்படம் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இது அடுத்தடுத்த பாகங்களுக்கான ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது.