பான் இந்தியா ஹீரோக்களுடன் நடித்தும் மண்ணை கவ்விய பூஜா ஹெக்டே.. அடி மேல அடி வாங்கிய 4 பிளாப் படங்கள்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே . இவர் பான் இந்தியா ஹீரோக்களுடன் நடித்து அனைவரின் கவனத்தை திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனாலும் இவர் நடித்த படங்கள் சமீப காலமாகவே இவருக்கு ஒரு ஃபெயிலியர் படமாக தான் அமைந்து வருகிறது. தொடர்ந்து அடிமேல் அடிவாங்கிய பிளாப் ஆன படங்களை பற்றி பார்க்கலாம்.

அதிலும் கடந்த வருடத்தில் இருந்து நடித்து வெளிவந்த படங்கள் தொடர்ந்து பெயிலியர் படமாக தான் இருக்கிறது. அதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷ்யாம் படத்தை அதிக அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து நிலையில் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக இப்படம் அமையவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் சராசரியான லாபத்தை பெற்றது.

அடுத்ததாக தமிழிலும் நடித்து எப்படியாவது பிரபலமாகி விடணும் என்று விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். இதில் கிளாமர் குயின்னாக விஜய்யுடன் வலம் வந்தார். ஆனாலும் இந்தப் படத்தின் கதை கொஞ்சம் சொதப்பலாக இருந்ததால் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இவருடைய ரோலை நன்றாக செய்திருந்தாலும் இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதால் எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனை அடுத்து தெலுங்கு படமான ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் அவர்களுடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்திருப்பார். இப்படத்தில் இரண்டு ஜாம்பவான்கள் சேர்ந்து நடித்ததால் நாம் பெரிய அளவில் வெற்றி பெறலாம் என்று கனவு கோட்டையில் பூஜா ஹெக்டே இப்படத்தில் நடித்தார். ஆனால் இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாக பெரிய தோல்வியை கொடுத்தது.

அடுத்ததாக இன்று திரையரங்கில் வெளியான கிசி கா பாய் கிசி கி ஜான் இப்படத்தில் சல்மான்கான் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் பெரிய அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இப்படம் தமிழில் அஜித் நடித்து வெளிவந்த வீரம் படத்தின் ரீமேக் படம் ஆகும். ஆனால் தமிழில் வெற்றி பெற்ற இப்படம் அங்கே தோல்வியை சந்தித்து வருகிறது. இப்படி தொடர்ந்து நடித்து வெளிவரும் படங்கள் எல்லாம் அவருக்கு வெற்றியை கொடுக்காமல் தோல்வியை மட்டும் கொடுத்து வருகிறது.

இப்படி பூஜா ஹெக்டே நடித்து வரும் படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் இதே மாதிரி நீடித்தால் கூடிய சீக்கிரத்தில் பீல்ட் அவுட் ஆகி விடுவார். ஆனாலும் இதற்கெல்லாம் காரணம் இவரால் சரியான முறையில் படங்களின் கதையை தேர்ந்தெடுக்க தெரியவில்லை. இவரை தேடி வரும் வாய்ப்புகளை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் இவர் சரியான கேரக்டரை தேர்வு செய்யவில்லை என்றே சொல்லலாம்.