பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ரஜினிக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருக்கும் நடிகர் ஒருவர் தற்போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவருக்கு தற்போது உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளதாக வெளிவந்த செய்திகள் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹீரோ, வில்லன், குணச்சத்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் சரத்பாபு, ரஜினியுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் முத்து, அண்ணாமலை போன்ற பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் விருப்ப படங்களாக இருக்கிறது.
அந்த வகையில் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். மேலும் இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். அதனாலேயே அவருக்கான ரசிகர்கள் வட்டமும் அதிகமாக இருக்கிறது.
தற்போது 71 வயதாகும் சரத்பாபு உடல் நலத்தை கருத்தில் கொண்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வந்தது.
அதை தொடர்ந்து அவருடைய உடல்நலம் சீராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது திடீரென அவருடைய சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அனைத்தும் அலர்ஜியினால் செயலிழந்து விட்டதாம்.
அதை தொடர்ந்து அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றி மருத்துவர்கள் அவசர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இருப்பினும் அவருடைய உடல்நிலை தற்போது ஆபத்தான கட்டத்தில் தான் இருக்கிறது. இதை கேள்விப்பட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணம்பெற வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.