குரங்கு பட இயக்குனரின் கூட்டணியில் இணையும் விஜய் சேதுபதி.. அதிரடியாக வெளிவந்த 50வது படத்தின் அப்டேட்

விஜய் சேதுபதி தற்போது ஹோலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இவருடைய படத்தை பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும் இவருடைய நடிப்பை ரசித்துப் பார்க்கும் படியாக எந்த கேரக்டராக இருந்தாலும் எதார்த்தமான நடிப்பை காட்டி இருப்பார். அதுதான் இவருடைய மிகப்பெரிய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது என்று கூட சொல்லலாம். அப்படிப்பட்ட இவர் தற்போது அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனாலேயே இவருடைய மார்க்கெட் ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே தான் இருக்கிறது.

அத்துடன் ஹீரோவாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் இவருக்கு முக்கியத்துவமாக எந்த கேரக்டர் இருந்தாலும் நடிப்பதற்கு தயங்கவே மாட்டார். அப்படித்தான் பல படங்களில் நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்து அதிலும் ரசிகர்கள் மனதை வென்றிருக்கிறார். அத்துடன் ஒரு மாதத்திற்கு ஒரு படம் என்று நடித்து வெளியிடுவதில் மிகப்பெரிய மன்னன் என்று கூட சொல்லலாம். அதனாலேயே வந்த கொஞ்ச வருஷத்திலேயே தற்போது ஐம்பதாவது படத்தை நெருங்கி விட்டார்.

இவருடைய ஐம்பதாவது படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அத்துடன் வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். இவர் ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அத்துடன் எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவும் பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இவர் இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு வில்லன் கேரக்டருக்கு நன்றாகவே பொருந்தக் கூடியவராகவும் நயன்தாராவுக்கு இவர்தான் சரியான வில்லன் என்று சொல்லும் அளவிற்கு நன்றாகவே நடித்திருப்பார். இவர் மறுபடியும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார்.

இதற்கடுத்து விஜய் சேதுபதி ஐம்பதாவது படம் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் தற்காலிகமாக இப்படத்திற்கு மகாராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மறுபடியும் விஜய் சேதுபதி நயன்தாரா காம்போ பார்ப்பதற்கு இவர்களுடைய ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

கொஞ்ச நாட்களாகவே விஜய் சேதுபதியே வில்லத்தனமான கேரக்டரை பார்த்த ரசிகர்களுக்கு மறுபடியும் ஒரு காதல் படமாக இப்படம் அமையப் போகிறது. மேலும் இக்கதை சற்று வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதனை அடுத்து கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.