புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

3 ஹீரோக்களின் இடத்தை பிடிக்கும் கவின்.. ஒரே ஹிட்டால் புரட்டிப்போட்ட சினிமா கேரியர்

சின்னத்திரை சீரியல்களால் பிரபலமான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அந்த ஷோவில் இவர் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இப்போது வெள்ளி திரையில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கிறார். இதற்கு முன்பு அவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இப்போதுதான் அவருக்கான அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.

அந்த வகையில் லிப்ட் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை தேடிக் கொடுத்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த டாடா திரைப்படம் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதை தொடர்ந்து இப்போது அவர் காட்டில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் அவருக்காக பல தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்கிறார்களாம்.

Also read: வந்த வேகத்திலேயே காணாமல் போன கூட்டணி.. பெரும் மன உளைச்சலில் இருக்கும் கவின்

அந்த அளவுக்கு அவர் இப்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கிறார். இது வளர்ந்து வரும் மூன்று நடிகர்களுக்கு வயித்தெரிச்சலை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால் ஒரு வெற்றிக்காக போராடி வரும் அந்த நடிகர்கள் சத்தமில்லாமல் வளர்ந்து வரும் கவினின் வளர்ச்சியை பார்த்து கொஞ்சம் பயந்து தான் போயிருக்கிறார்கள்.

இதன் மூலம் தங்களுடைய திரை வாழ்வுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதை நினைத்து அவர்கள் கலக்கத்திலும் இருக்கிறார்களாம். அந்த வகையில் அஸ்வின், ஹரிஷ் கல்யாண், ஜிவி பிரகாஷ் ஆகிய மூன்று நடிகர்கள் தான் கவினின் வளர்ச்சியை பார்த்து மிரண்டு போய் இருக்கின்றனர். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் இப்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Also read: அசுர வேகத்தில் உருவெடுக்கும் இரண்டு இளம் ஹீரோக்கள்.. டாடாவிற்கு டஃப் கொடுக்கும் தூங்கு மூஞ்சி

கடைசியாக அவர் நடித்திருந்த செம்பி திரைப்படம் அவருக்கான நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது. அதேபோன்று ஹரிஷ் கல்யாண், தோனியின் தயாரிப்பில் நடித்து வருகிறார். இந்த படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் அடுத்தடுத்த படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்படி தங்களுக்கான இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த மூன்று நடிகர்களுக்கு போட்டியாக கவினும் களத்தில் குதித்திருக்கிறார். இதனால் இவர்களுக்கான போட்டியும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆனாலும் கவின் தான் இப்போது பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் சாய்ஸாக இருக்கிறார்.

Also read: கவின் முக்கியமல்ல, தனுஷ் தான் முக்கியம்.. சுயநலமாக பேசிய அப்பாவை லாக் செய்த அனிருத் 

Trending News