திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புலியை பார்த்து சூடு போட்ட பூனை.. விஜய் இடத்தை பிடிக்க படாத பாடுபடும் சிவகார்த்திகேயன்

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. பொதுவாகவே ஒரு படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் தான் பரபரப்பை கிளப்பும். ஆனால் லியோ பட பூஜை போடப்பட்டதிலிருந்தே பலரின் ஆவலையும் தூண்டி இருக்கிறது.

இது பல நடிகர்களின் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது. ஏனென்றால் விஜய்க்கு சாதாரணமாகவே ரசிகர்கள் வட்டம் அதிகம். அதிலும் லியோ படத்தால் அவருக்கான புகழ் இன்னும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இவர் ரஜினியின் இடத்தை பிடிப்பதற்கும் மறைமுகமாக போராடி வருகிறார்.

Also read: சிங்கம் போல் கர்ஜிக்க தயாரான சூப்பர் ஸ்டார்.. தோல்வி பயத்தால் சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு

இது ஒரு புறம் இருக்க இவருடைய இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் தான் முதலிடத்தில் இருக்கிறார். ஏனென்றால் சமீப காலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இதை மறைமுகமாக நமக்கு உணர்ச்சி விடுகிறது. அதாவது சிவகார்த்திகேயனுக்கு ஒரு சில கேரக்டர்கள் தான் பக்காவாக பொருந்தும்.

அந்த வகையில் அவர் தனக்கே உண்டான காமெடிகளை வைத்து தான் நிறைய படங்களில் வெற்றி கண்டுள்ளார். அதைத்தான் ரசிகர்களும் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் அவருக்கு செட் ஆகாத சில கேரக்டர்களிலும் அவர் நடித்திருக்கிறார். அதாவது ஆக்சன் செய்கிறேன் என்ற பெயரில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் சொதப்பலை தான் சந்தித்திருக்கிறது.

Also read: கமல் அடிச்ச அப்பாயின்மென்ட் ஆர்டர்.. 3 இயக்குனர்களை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்

சுருக்கமாக சொல்லப்போனால் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக தான் இது இருக்கிறது. அந்த வகையில் விஜய் இடத்தை பிடிப்பதற்காகவே இவர் இது போன்ற ஆக்சன் கதைகளை தேர்ந்தெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது அவர் கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கும் படத்திலும் ஆக்சன் கேரக்டரில் தான் நடிக்கிறாராம்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மிலிட்டரி மேன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவருக்கு பொருந்தும் வகையிலான உடைகளை எல்லாம் இப்போது விறுவிறுப்பாக தைத்துக் கொண்டிருக்கிறார்களாம். அது மட்டுமின்றி பட குழுவினர் விரைவில் காஷ்மீரை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்க இருக்கிறார்கள்.

Also read: லோகேஷை கைக்குள் போட்டுக்கொண்ட சன் பிக்சர்ஸ்.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்து வளைத்து போட இப்படி ஒரு திட்டமா? 

சமீபத்தில் கூட லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் படுஜோராக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவையே ரணகளப்படுத்தியது. அதை பார்த்து தான் இப்போது சிவகார்த்திகேயனும் அதிரடிக்கு மாறி இருக்கிறார். அந்த வகையில் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த கேரக்டர் அவருக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending News