கமலுக்கு கொஞ்ச காலமாகவே எந்த படங்களும் சரியாக வெற்றி பெறாமல் துவண்டு போய் இருந்தார். அந்த நேரத்தில் இவருக்கு வரப்பிரசாதமாக லோகேஷ் கிடைத்தார். அதன் மூலம் இவர்கள் இரண்டு பேரும் வைத்த கூட்டணி தான் விக்ரம். இப்படம் கமலுக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. எல்லா பக்கமும் விக்ரம் படத்தையும் இவருடைய நடிப்பையும் பற்றி தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அளவிற்கு இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து மறுபடியும் இவர் இதே மாதிரி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்க வேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அதனால் தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படபிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்தில் மணிரத்தினத்துடன் கூட்டணி வைக்கப் போகிறார். இதில் மிகப்பெரிய பிரமாண்டமான அளவில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இப்படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறது. அதனால் கமலுடன் சேர்ந்து இரண்டு மூன்று கதாநாயகர்களை சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள். இதில் தற்போது சிம்பு நடிக்க போவதாக உறுதியாக இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே சிம்புவிடம் நடைபெற்று விட்டது.
அதனால் தான் பொன்னியின் செல்வன் 2 விழாவிற்கு கூட சிம்பு பங்கேற்றிருக்கிறார். இவரைத் தொடர்ந்து இன்னும் இரண்டு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அத்துடன் கமல் மற்றும் மணிரத்தினம் இவர்கள் இருவரும் சேர்ந்தாலே அந்த படம் ஹிட் ஆகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மேலும் சிம்பு முன்மாதிரி சில்மிஷம் எதுவும் செய்யாமல் படத்தில் நடிப்பதற்கு அதிக கவனம் எடுத்து நிறைய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பத்து தல படம் இவருக்கு வெற்றி படமாக தான் அமைந்தது. இதனை அடுத்து கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. ஆனால் இவருடைய மாநாடு வெற்றி படத்திற்கு பிறகு இவருடைய சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். இதனாலே இவர் கேட்ட சம்பளத்துக்கு எந்த படமும் வராமல் இருந்த நிலையில் தற்போது கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என்றால் இவர் கேட்ட சம்பளத்தை கமல் கொடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.