ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அவன் இவன் படத்தில் நடிக்க இருந்த அண்ணன், தம்பி நடிகர்கள்.. பாலா சூழ்ச்சி தெரியாமல் காத்து கிடந்த சோகம்

தமிழ் சினிமாவிற்கு ரொம்பவே கரடு முரடான படங்களை கொடுத்த இயக்குனர் தான் பாலா. இவருடைய படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு அழகோ பணமோ முக்கியம் இல்லை, திறமை தான் அவசியம் என பல பேட்டிகளில் அவரே சொல்லி இருக்கிறார். அப்படி சினிமாவில் இருக்கும் அண்ணன் தம்பிகளின் திறமையை பார்த்து முதலில் ‘அவன் இவன்’ படம் அவர்களுக்கு தான் கிடைத்துள்ளது.

ஆனால் சூழ்ச்சியால் அது கைநழுவி சென்றுவிட்டது. நடிகர் ஜித்தன் ரமேஷ் தயாரிப்பாளர் மகனாக அறிமுகமாகி ஒரு இரு படங்களை தவிர இன்றுவரை வெற்றி பெறாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இருப்பினும் எப்படியாவது தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என பட வாய்ப்பு கிடைப்பதற்காகவே, பிக் பாஸில் கலந்து கொண்டால் ஏதாவது நல்ல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார்.

Also Read: தன்னை வளர்த்தவரை மிரட்டிய சூர்யா.. காசு கண்ணை மறைக்குது, இயக்குனருக்கு நேர்ந்த கொடுமை

ஆனால் அதுவும் நடக்காமல் போனது. இவர் சினிமா வாழ்க்கையில் இவரிடமும் இவர் தம்பி ஜீவாவிடமும் வந்த வாய்ப்பு கைநழுவி போனது இன்று வரை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாலா ‘அவன் இவன்’ படத்தின் கதையை இவர்களை வைத்துதான் எழுதினாராம்.

ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா இருவரையும் நடிக்க வைக்க ஆசைப்பட்டு எழுதிய கதையில் சரி என்று இவர்கள் ஒத்துக் கொண்டனர். கொஞ்ச நாட்களில் படம் ஆரம்பிக்கப்படும் என நினைத்தார்கள். ஆனால் திடீரென இவர்களுக்கே தெரியாமல் அந்த படத்தில் விஷால், ஆர்யா நடிப்பதாக போஸ்டர் வந்தது.

Also Read: மீண்டும் மீண்டும் ஹீரோயினுக்கு வலைவீசிய பாலா.. கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டாராம்

அதை பார்த்து ஜித்தன் ரமேஷ் வருத்தப்பட்டுள்ளார். என்னவென்று விசாரித்து பார்த்ததில் அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் எங்களை நடிக்க வைத்தால் யார் பார்ப்பார்கள் என்று கதாநாயகர்களை மாற்றிவிட்டனர் என்று கேள்விப்பட்டேன்.

ஒரு தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும் நான் பெரிதும் பாதிக்கப்பட்டது பல தயாரிப்பாளர்களால் தான் என வருத்தப்பட்டு பேசி உள்ளார் ஜித்தன் ரமேஷ். ஏனென்றால் ஜித்தன் ரமேஷின் தந்தை தயாரிப்பாளராக பலரது கோபத்தை சம்பாதித்திருக்கிறார். அதையெல்லாம் மூத்த வாரிசான ஜித்தன் ரமேஷ்சை தான் பழி தீர்த்து இருக்கிறது.

Also Read: பாலுமகேந்திராவையே வாயடைக்க செய்த இயக்குனர்.. செய்யாத ஒன்றுக்கு பழி ஏற்காத பாலா

- Advertisement -

Trending News