திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அஜித்தை வியாபாரமாக்க நினைக்கும் பிரம்மாண்ட நிறுவனம்.. சரியான பதிலடி கொடுத்த ஏகே

அஜித்தின் துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு ரிலாக்ஸ்சேஷனுக்காக வெளிநாடு சென்றிருந்தார். இந்நிலையில் இவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டுகள் எதுவுமே கொடுக்காத நிலையில் இவருடைய ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இவரின் பிறந்த நாள் அன்று விடாமுயற்சி என்ற படத்தின் டைட்டிலை வெளியிட்டார். இதற்கு அடுத்து இவருடைய படத்தின் வேலைகளை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் வேர்ல்ட் டூரை கையில் எடுத்திருக்கிறார்.

இதற்கான முதல் கட்டத்தையும் முடித்து வந்துள்ளார். அடுத்ததாக விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கு இடையில் இவர் போன வேர்ல்ட் டூரை அஜித் தன்னுடைய நினைவின் பொக்கிஷமாக வைப்பதற்காக வீடியோவை எடுத்து இருக்கிறார். இதை தெரிந்த நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் எப்படியாவது இந்த வீடியோவை படமாக்கி வெளியிட்டு பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.

Also read: ஒரே படத்தோடு கும்மிடுபோட்டு போன 6 நடிகைகள்.. அஜித் படத்துடன் காணாமல் போன பூனை கண் நடிகை

அதனால் அஜித்திடம் அந்த வீடியோவை கொடுங்கள் நான் படமாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்கிறேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அஜித் நான் படம் பிடித்தது உண்மைதான். ஆனால் அது எனக்காக எடுத்துள்ளேன். இதை நீங்கள் எப்படி கேட்கலாம் என்று கேட்டிருக்கிறார். அத்துடன் பல பிரபல நிறுவனங்களும் இந்த படத்தை வியாபாரம் ஆக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இதை தெரிந்த அஜித் அவர்களின் அனைவருக்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டார். அவர்களிடம் தெளிவாக இது என்னோட சந்தோஷத்திற்காக நான் எடுத்த படம் இது வியாபாரம் ஆக்கக்கூடாது என்று கூறிவிட்டார். ஆனாலும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இதை எப்படியாவது வாங்கி வெளியிட ஆசைப்பட்டு வருகிறது.

Also read: மார்க்கெட் இழந்த நிலையில் கம்பேக் கொடுத்த 5 நடிகர்கள்.. சொல்லி அடித்து தரமான படத்தை கொடுத்த சிம்பு

ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஒரே பதிலாக வியாபாரத்திற்காக என்னை மிஸ் யூஸ் படுத்தாதீர்கள். அதற்கு ஏற்ற ஆளும் நான் கிடையாது என்று அவர்கள் அனைவருக்கும் சரியான பதிலடி கொடுத்து விட்டார். அடுத்ததாக வருகின்ற நவம்பர் மாதத்தில் மறுபடியும் அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதற்கு இடையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை விரைவில் தொடங்கி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடு வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் ரசிகர்கள் எதிர்பார்ப்பின் படி கூடிய விரைவில் இப்படம் தொடங்க இருக்கிறது.

Also read: இரட்டை கதாநாயகர்களாக அஜித் நடித்த 5 படங்கள்.. ஆக்சன் கிங்க்கு இணையாய் நின்ற அஜித்

- Advertisement -

Trending News