ஆதித்த கரிகாலன் முதல் குந்தவை வரை அசிங்கப்படுத்திய கொடுமை.. லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மணிரத்தினம்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை தற்போது நினைவாக்கிய மணிரத்தினம் மிகுந்த மன நிறைவுடன் இருக்கிறார். இருப்பினும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

இதனால் படத்தைப் பார்த்த பலரும் கல்கியின் நாவலில் இருப்பதை விட மணிரத்தினம் எக்ஸ்ட்ராவாக நிறைய விஷயத்தை மாற்றி இருக்கிறார் என்று பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் ஓரளவு ரசிகர் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.

Also Read: எல்லாம் அவளை மறக்கத்தான் என சுற்றித் திரிந்த விக்ரம்.. ஆறுதலுக்காக மணிரத்னம் எடுத்துள்ள தரமான முடிவு

எனவே தன்னுடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்றி சந்தோஷத்தில் மணிரத்தினம், அந்த படத்திற்காக உழைத்த தொழிலாளர்களை அழைத்து வயிறார விருந்தளிக்க வேண்டும் என நினைத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். ஆனால் அதை கொஞ்சம் கூட மதிக்காத பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அசிங்கப்படுத்தும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு அந்த படத்தில் வேலை செய்த டெக்னீசியன்களுக்கு கிண்டி ரேஸ் கோர்ஸ கிளப்பில் விருந்து வைக்கப்பட்டது. இதில் மணிரத்தினம் மற்றும் சுகாசினி இருவரும் இணைந்து வரவேற்று அனைவருக்கும் விருந்து வைத்தனர். ஊர் ஊராக சுற்றி வந்த நடிகர்கள் இந்த விழாவில் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை.

Also Read: பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியக்கூடாது.. 10 பாகங்களாக ராஜமவுலி உருவாக்க உள்ள புராணக் கதை

காரணம் இது நடத்தப்படும் இடம் ஒரு சாதாரண கிளப் என்பதால் வரவில்லை. இதுவே பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்திருந்தால் வந்திருப்பார்கள். இதனால் இதில் கலந்துகொண்ட படத்தின் டெக்னீசியர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள். இருந்தாலும் மகிழ்ச்சியாக முடித்து சென்றனர்.

ஆனால் படத்தில் நடித்த ஆதித்த கரிகாலன் முதல் குந்தவை வரை இப்படி அசிங்கப்படுத்தி விட்டார்களே என மணிரத்தினம் மிகவும் டென்ஷன் ஆகிவிட்டார். அதனால் இந்த விருந்து நிறைவடைந்த உடன் மணிரத்தினம் அந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளை தொலைபேசியின் வாயிலாக அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.

Also Read: பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அலங்கரித்த நிஜ குந்தவை.. வைரலாகும் இளவரசியின் போலி புகைப்படம்