செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லைக்காவுக்கு பல்பு கொடுத்த பொன்னியின் செல்வன் 2.. ஊர் ஊராக ப்ரமோஷன் செய்தும் கிடைக்காத வசூல்

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிய திரைக்காவியம் தான் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவையும், சில எதிர்மறை விமர்சனங்களையும் ஒருசேர பெற்றது. மணிரத்தினம் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கல்கியின் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களை பெருமளவில் அதிருப்தி அடைய செய்தது. அதுவே தற்போது வசூலுக்கான ஒரு தடையாகவும் மாறி இருக்கிறது.

Also read: பொன்னியின் செல்வனால் லைக்காக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்.. சுத்தி போட்ட ஸ்கெட்ச், பதட்டத்தில் சுபாஸ்கரன்

அந்த வகையில் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் பாகத்திலேயே அந்த பணத்தை வசூலித்திருந்தது. அதை தொடர்ந்து இரண்டாம் பாகமும் அதைவிட இரு மடங்கு லாபம் பார்க்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது பலருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் இருக்கிறது பொன்னியின் செல்வன் 2-ன் வசூல் ரிப்போர்ட்.

ஏனென்றால் இப்போது வரை இந்த இரண்டாம் பாகம் 350 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏனென்றால் இரண்டாம் பாகத்தை வேற லெவல் வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதற்காக லைக்கா நிறுவனம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அது மட்டுமல்லாமல் பிரமோஷனுக்காக மட்டுமே கோடிக்கணக்கில் செலவு செய்தது.

Also read: 2023ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்திய சினிமாவை மிரட்டி விடப் போகும் 5 படங்கள்.. போட்டி வேண்டாம் என விலகிய கமல்

மேலும் தனி விமானம் ஏற்பாடு செய்து முக்கிய நட்சத்திரங்கள் அனைவரையும் ஊர் ஊராக அழைத்துச் சென்றது லைக்கா. அதிலும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட பலரும் தங்களுடைய சுவாரசிய பேச்சுக்கள் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். அதுவே சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்ட் ஆகி வந்தது. ஆனால் அந்த ராஜதந்திரங்கள் அனைத்தும் தற்போது பலனளிக்கவில்லை.

மிக குறைவான அளவில் வசூலித்திற்கும் பொன்னியின் செல்வன் 2 லைக்காவின் மனக்கோட்டையை தகர்த்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு சிறு பட்ஜெட் படங்களும் வெளிவந்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது. இதுவும் இந்த வசூல் பின்னடைவுக்கு ஒரு காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: லைக்காவை டீலில் விட்ட விஷால்.. நண்பர்களால் திருப்பி அடிக்கும் கர்மா

Trending News