லோகேஷ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவரும் லியோ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை சீக்கிரமாக முடித்துவிட்டு வருகிற அக்டோபர் மாதம் திரையரங்களில் வெளியிடப் போவதாக தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக ஏதாவது பெரிய இயக்குனருடன் கைகோர்ப்பார் என்று நினைத்திருந்தோம்.
அதே மாதிரி இவருடைய கால் சீட்டுக்காக பெரிய இயக்குனர்கள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருந்தனர். அதில் யாரையாவது ஒருவரை ஒப்பந்தம் செய்வார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். அதிலும் முக்கியமாக அட்லீ இயக்கத்தில் இணைவார் என்று இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.
இவர் என்னதான் அஜித்துக்கு மங்காத்தா, சிம்புக்கு மாநாடு என்று ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் இவர் ஒன்னும் பெரிய இயக்குனர் என்று சொல்லும் அளவிற்கு அதிலும் விஜய் படத்தை எடுப்பதற்கு இவர் இன்னும் வளரவில்லை. அப்படி இருக்கும் போது எந்த தைரியத்தில் விஜய் இந்த மாதிரி இவருடன் கூட்டணி வைக்க இருக்கிறார் என்று ஒரு கேள்விக்குறியை எழுப்புகிறது.
முக்கியமாக வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா இவர்கள் இருவரும் அஜித்தின் குரூப் என்று விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருவார்கள். இப்படி இருக்கையில் தற்போது விஜய் இவருடன் சேர்ந்திருப்பது என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு சொல்லும்படி இவர் ஒன்னும் பெரிய மாஸ் இயக்குனரும் கிடையாது.
அதிலும் இவர் கடைசியாக நாக சைதன்யாவை வைத்து எடுத்த கஸ்டடி படம் கொஞ்சம் கூட பார்க்க முடியாத ஒரு படமாக வெளிவந்திருக்கிறது. இதை தெரிந்தும் ஏன் தளபதி 68க்கு விஜய், வெங்கட் பிரபுவை நம்பி அதிக அளவில் ரிஸ்க் எடுக்கிறார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இப்படித்தான் ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் படம் மிகப்பெரிய தோல்வி படமாக இருந்தது. இப்படத்திற்குப் பிறகு விஜய்யை வைத்து தலைவா என்ற படத்தை எடுத்தார் ஆனால் அதுவும் தோல்வியை தான் கொடுத்தது.
அதே மாதிரி வெங்கட் பிரபு கஸ்டடி என்ற தோல்வி படத்திற்குப் பிறகு விஜய் உடன் இணைகிறார் என்றால் விஜய்யின் 68 படத்தின் நிலைமை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள். இதற்கு இடையில் சில ரசிகர்கள் வெங்கட் பிரபு படம் என்றால் கண்டிப்பாக கலகலப்பாக இருக்கும் அதனால் பார்க்க விறுவிறுப்பாக அமையும் என்று நடுநிலையோடு பேசி வருகிறார்கள். மொத்தத்தில் தளபதி 68 ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.