ஆரம்பத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த சிம்பு போக போக தன்னுடைய நடவடிக்கைகளால் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்தார். அதிலும் சரியாக படபிடிப்பில் பங்கேற்காதது, தொடர் தோல்வி படங்கள் என இவர் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்தார். அதற்கேற்றார் போல் அவருடைய உடல் எடையும் அதிகரிக்கவே மொத்தமாக அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.
அந்த கேப்பில் பல நடிகர்களும் முன்னணி இடத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தார்கள். அதை புரிந்து கொண்ட சிம்புவும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை குறித்து மாநாடு படத்தின் மூலம் தரமான ஒரு வெற்றியை பதிவு செய்தார். அதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களும் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.
மேலும் தற்போது அவர் கமல் தயாரிப்பில் நடிக்க இருப்பதும் பல நடிகர்களுக்கு வயிற்றெரிச்சலை கிளப்பி இருக்கிறது. அதை சில நடிகர்கள் வெளிப்படையாகவே காட்டி வருகிறார்களாம். ஏனென்றால் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் வரலாற்று புனைவுடன் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது.
இப்படம் மட்டும் வெளிவந்தால் அவரின் மார்க்கெட் வேற லெவலுக்கு உயர்ந்துவிடும். அந்த அளவுக்கு இப்படம் ஒட்டு மொத்த ஆடியன்ஸையும் கவரும் என படக் குழுவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சிம்புவின் வளர்ச்சியை கெடுக்க வேண்டும் என்று சில நடிகர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலைகளை பார்த்து வருகிறார்களாம்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்றுள்ள நடிகர்களுக்கு சிம்புவின் இந்த முன்னேற்றம் ஒரு தடையாக மாறி இருக்கிறது. ஏனென்றால் கமல் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவரை தேடி குவிந்து கொண்டிருக்கிறது. அதனால் இப்போது சோழர்களுக்கான வாய்ப்புகள் குறைந்து போய் உள்ளது. இதுவே இந்த பிரச்சனைக்கு மூல காரணமாக இருக்கிறது.
இருந்தாலும் சிம்புவை யாராலும் அசைக்க முடியாது. ஏனென்றால் சமீப காலமாக அவருடைய நடவடிக்கைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. தரமான கதைகளை தேர்ந்தெடுப்பது, அமைதியாக பிரச்சனைகளை அணுகுவது என அவர் ஒரு யோகி போல் மாறி இருக்கிறார். அந்த வகையில் சோழர்கள் வாய்ப்பை கெடுக்க நினைத்தாலும் அது முடியாது என்ற உயரத்திற்கு அவர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.