விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரில் தொகுப்பாளராக தன் பயணத்தை மேற்கொண்டவர் ரக்சன். அதன் பின் குக் வித் கோமாளியில் வி ஜே வாக கலக்கி வரும் இவர் தற்போது படங்களில் ஹீரோவாக இடம்பெறும் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மலினா
தனக்கு வாய்க்கும் வாய்ப்பினை சிறப்புர செய்து வரும் இவர் 2020ல் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருப்பார். இவருக்கு இப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் குறிப்பாக இப்படத்தில் இவரின் நகைச்சுவை மற்றும் நடனம் சிறப்பாக அமைந்திருக்கும்.
அவ்வாறு இருக்கையில் தற்போது யோகேந்திரன் இயக்கத்தில் இவரின் நடிப்பில் வெளிவர இருக்கும் மறக்குமா நெஞ்சம் படத்தின் போஸ்டரை ஜெயம் ரவி வெளியிட்டு இருக்கிறார். மேலும் படத்தில் புதுமுக நாயகியாக மலினா நடிக்க இருக்கிறார். இவர் தமிழில் சிறுகதை படத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரக்சன்
மேலும் இதை தொடர்ந்து கலக்கப்போவது யாரு சிறந்த காமெடியான தீனா இப்படத்தில் நடிக்கிறார். இது ஒரு புறம் இருக்க ரக்சனின் இரண்டாவது படமான இப்படத்தில் அமுல் பேபியாக வரும் மலினா குறித்து பெரியதளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் போஸ்டரில் வரும் இவர்களின் கெட்டப் கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இவர்கள் காலம் கடந்து ஏற்கும் இத்தகைய பள்ளி மாணவர்களின் கெட்டப் இவர்களுக்கு கை கொடுக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மேலும் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த இவருக்கு இப்படி ஒரு ப்ரமோஷன் கிடைத்தது மக்களை ஆச்சரியப்பட செய்கிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார் ரக்சன்.