பாராட்டுகளை வாங்கி குவிக்கும் மாடன் லவ்.. அடுத்த சூப்பர் டீலக்ஸ் போல நெஞ்சை வருடிய தியாகராஜன் குமாரராஜா

சமீப காலமாக ஆந்தலாஜி தொடர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் அமேசான் பிரைம் வீடியோவில் மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தலாஜி தொடர் வெளியாகி உள்ளது. நியூயார்க் டைம்ஸில் இதழில் வெளியான மாடல் லவ் என்ற கட்டுரையை படமாக எடுத்திருந்தனர்.

மாடல் லவ் மும்பை, மாடன் லவ் ஹைதராபாத் என இந்த படம் வெளியாகி உள்ளது. இப்போது தமிழில் மாடல் லவ் சென்னை என ஆறு அத்தியாயங்கள் கொண்ட வெளியாகி இருக்கிறது. இந்த தொடரை முழுவதுமாக வழி நடத்தியது இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.

Also Read : பாரதிராஜாவை எதிர்த்து பேசிய நெப்போலியன்.. முதல் படத்திலேயே நடந்த ரணகளம்

இவர் ஆரண்யகாண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் லாலா குண்டா பொம்மைகள் என்ற முதல் அத்தியாயத்தை ராஜு முருகன் இயக்கியிருந்தார். பாலாஜி சக்திவேல் இமைகள் என்ற அத்தியாயத்தை இயக்கியுள்ளார். காதல் என்பது கண்ணுல படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் மார்கழி படத்தை அக்ஷய சுந்தர் இயக்கியிருந்தனர்.

இந்நிலையில் பறவை காட்டில் வாழும் மான்கள் என்ற நான்காவது அத்தியாயத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கி உள்ளார். இதற்கு அடுத்ததாக உள்ள நினைவோ ஒரு பறவை என்ற பகுதியை தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு படத்திற்குமே இளையராஜா இசையமைத்துள்ளார்.

Also Read : எனக்கும் நாலு காதலி உண்டு, ஓப்பனாக பேசிய பாரதிராஜா.. மாடர்ன் லவ்னா இப்படி இருக்கணும்

மேலும் யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன், ஜிவி பிரகாஷ் ஆகியோரும் இந்த படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இதில் அனைத்து பகுதிகளுமே நன்றாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். குறிப்பாக தியாகராஜா குமாரராஜாவின் நினைவோ ஒரு பறவை அல்டிமேட் ஆக உள்ளது.

மேலும் முதல் தடவை மட்டும் இந்த படத்தை பார்த்தால் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும், மீண்டும் மீண்டும் பார்த்தால் கண்டிப்பாக ரசிகர்களை கவரும். இது போன்ற படைப்புகள் இன்னும் நிறைய வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மாடர்ன் லவ் சென்னை மக்களின் மனதை வருடிய படமாக உள்ளது.

Also Read : ஐந்து ரூபாய்க்கு நடிக்க வந்த டாப் நடிகர், ஆணவத்தில் ஆடிய கமல்.. உண்மையை புட்டு புட்டு வைத்த பாரதிராஜா