திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

5 வருடங்களாக ஆப்பு அடிக்கும் அட்லி.. மார்க்கெட்டை இழந்து தவிக்கும் நயன்தாரா

நீண்ட நாட்களாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, தங்களுடைய கேரியருக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது என்பதற்காக வாடகை முறையில் 2 ஆண் குழந்தைகளுக்கும் தாயானார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துக் கொள்ளக் கூடிய நயன்தாராவை 5 வருடங்களாக ஆப்பு அடிக்கும் அட்லியால் தன்னுடைய மார்க்கெட்டை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் அஜித்தின் விசுவாசம், விஜய்யுடன் பிகிலுக்கு அப்புறம் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஓடவில்லை.

Also Read: எஸ்ஏசி-யை வைத்து விஜய்யை நக்கல் செய்த பயில்வான்.. ஜோடியை மாத்துற மாதிரி அதையும் மாத்துறீங்களா!

சமீபத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் தோல்வி. இருப்பினும் அட்லியின் ஜவான் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் நயன்தாரா பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார். மேலும் இதில் ஷாருக்கானுக்கு ஜோடி போட்டுள்ளார். ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த படத்தை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக எடுத்து நயன்தாராவின் கேரியரை கேள்விக்குறி ஆக்கிவிட்டார் அட்லி.

அந்தப் படம் ரிலீஸ் ஆகுவதாக தெரியவில்லை. இப்போது நயன்தாரா கையில் எந்த படங்களும் இல்லை. இறைவன் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பொருளாதார ரீதியாக அதுக்கும் பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. படத்தின் ப்ரோமோசனுக்கு வர மறுக்கிறார்.

Also Read: முதல்முறையாக இணையும் 7 கூட்டணி.. இணையத்தையே அல்லோலபடுத்திய வெங்கட் பிரபு, தளபதி காம்போ

அதனால் இவர் பங்கை தர தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் யோசிக்கின்றனர். மேலும் தற்போது வெளியாகும் டாப் நடிகர்களின் படங்களில் நயன்தாராவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அஜித்தின் விடாமுயற்சி மற்றும் விஜய்யின் தளபதி 68 படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என ஏங்குகிறார்

இருப்பினும் ஜவான் படத்தில் அட்லி விட்டால் ஒழிய அவர்பிற நடிகர்களின் பட வாய்ப்பை பெற முடியும் ஆனால் அவர் ஐந்து வருடங்களாக இந்த படத்தை இழுத்தடிப்பதால் நயன்தாராவின் மார்க்கெட் கேள்விக்குறியாகி உள்ளது.

Also Read: தளபதி 68 விஜய்யுடன் மோத உள்ள சைக்கோ வில்லன்.. வெங்கட் பிரபுவின் தரமான செலக்சன்

Trending News