சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனுக்குடன் ரசிகர்களின் பார்வைக்கு வந்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது விஜய் பட நடிகர் ஒருவர் 60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட செய்தி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
அந்த வகையில் விஜய்யின் தமிழன், பகவதி உள்ளிட்ட படங்களில் அவருக்கு வில்லனாக நடித்தவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. பல திரைப்படங்களில் கொடூரமான வில்லனாக நடித்த இவர் கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாகவும் நடித்து அசத்தியிருப்பார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடா, தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் இன்று ரூபாலி என்ற அசாம் பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆஷிஷ் வித்யார்த்தி – ரூபாலி

நெருங்கிய உறவுகளுக்கு முன்னிலையில் சிம்பிளாக நடந்த இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணையதளத்தையே அதிர வைத்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த வயதில் எதற்காக இரண்டாவது திருமணம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ஆனால் அதற்கு ஆஷிஷ் வித்யார்த்தி சிம்பிளான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். அதாவது கடந்த சில வருடங்களாக ரூபாலியுடன் அவர் நட்புடன் இருந்திருக்கிறார். நாளடைவில் அது காதலாக மாறவே தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த ஜோடி விரும்பி இருக்கிறது. அதன் பிறகுதான் இந்த பதிவு திருமணமே நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
60 வயதில் இரண்டாம் திருமணம் செய்த ஆஷிஷ் வித்யார்த்தி

மேலும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ரஜோஷி வித்யார்த்தி என்ற மனைவியும், ஒரு பிள்ளையும் இருக்கின்றனர். இந்த சூழலில் அவருடைய திருமணம் திரையுலகினருக்கே பெரும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இருப்பினும் அவருக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.