சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸில் அக்காவால் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்.. பேட்டியில் சொன்ன அதிர்ச்சி காரணம்

ஒவ்வொரு வாரமும் டிஆர்பி-யில் பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது கண்ணன்- ஐஸ்வர்யா செய்த வேலையால் கதிரை போலீஸ் கைது செய்துள்ளது. இதனால் அண்ணன் தம்பிகள் சேர்ந்து நகைநட்டை எல்லாம் விற்று 5 லட்சத்தை ரெடி பண்ணி இப்போது கதிரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்திருக்கின்றனர்.

இப்படி பாசப் போராட்டத்தை அழகாக காட்டிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென்று பிரபலம் ஒருவர் வெளியேறி இருப்பதாக பேட்டி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சீரியலில் ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்திற்கு மட்டும் இரண்டு கதாநாயகிகள் மாறிவிட்டனர்.

Also Read: கோபியை கதற கதற கலாய்த்த ஒட்டுமொத்த குடும்பம்.. அல்டிமேட் நக்கல் நையாண்

அதேபோல் ஐஸ்வர்யாவாக தீபிகா முன்பு நடித்து, அதன் பிறகு காயத்ரியும் தற்போது மறுபடியும் தீபிகாவே நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல வருடங்களாக ஜீவா-மீனா தம்பதியரின் குழந்தைக்காக நடித்து வரும் கயல் பாப்பா தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக அவருடைய அம்மாவை பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி உள்ளார்.

கயலாக நடிக்கும் ஹாசினி இப்போது பள்ளிக்கு செல்வது போல் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த கேரக்டருக்கு ஹாசினி சரியாக பொருந்தாததால், ஹாசினியின் அக்காவே கயல் கேரக்டரில் தொடர உள்ளாராம். கயலின் அக்காவும் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read: இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இருக்கும் டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தில் முன்னேறும் புத்தம் புது சேனல்

அதனால் அவர் தான் இனிமேல் கயல் பாப்பாவாக நடிக்க போகிறாராம். இருப்பினும் தொடர்ந்து இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கயலின் க்யூட் பர்பாமன்ஸை இனி பார்க்க முடியாதே என வருத்தம் அடைந்துள்ளனர். இருப்பினும் அவருடைய இடத்தை அவரது அக்கா நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சீரியல் நிறைவடைந்ததாக கூறப்படும் தகவலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இன்னும் ஒரு சில வருடத்திற்கு இந்த சீரியலை உருட்டப் போகின்றனர். அதற்காக தான் கயல் பாப்பாவாக இப்போது கொஞ்சம் வளர்ந்த குழந்தையை நடிக்க வைக்கும் திட்டத்தில் விஜய் டிவி இருக்கிறது.

இனி கயல் பாப்பாவாக நடிக்க போகும் கயலின் சொந்த அக்கா

Also Read:
Also Read:

Also Read: பாசமலையை பொழியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இதையும் வீடியோ எடுத்துப் போடும் ஐஸ்வர்யா

Trending News