திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புளியங்கொம்புல இருந்து முருங்க கொம்புக்கு வந்த தோனி.. விஜய்யை நம்பி மொக்கை வாங்கிய தல

புடிச்சாலும் புளியங்கொம்பா பார்த்து தான் பிடிக்கணும் அப்படின்னு கங்கணம் கட்டிக்கொண்டு வந்த தோனிக்கு கிடைத்தது என்னவோ முருங்கை கொம்பு தான். கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்த அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் காரணமாகவே தற்போது அவர் சினிமா பக்கமும் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக தன்னுடைய முதல் படத்தையும் தொடங்கி இருக்கிறார். LGM என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜோராக சென்று கொண்டிருக்கிறது.

Also read: தளபதி 68ல் விஜய்க்கு ஜோடியாகும் ஆறடி நடிகை.. விஜய் டிவி நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கும் வெங்கட் பிரபு

சமீபத்தில் கூட இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு தரப்பு வெளியிட்டு இருந்தது. இப்படி படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க பல முயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் அனைவருக்கும் இருக்கும் ஒரே கேள்வி ஏன் தோனி பெரிய ஹீரோவை வைத்து படம் தயாரிக்கவில்லை என்பதுதான். ஏனென்றால் மிகப்பெரும் பிரபலமாக இருக்கும் இவர் படம் தயாரிக்கிறேன் என்றால் எந்த நடிகரும் நடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டார்கள்.

அப்படி இருக்கும்போது எதற்காக அவர் ஹரிஷ் கல்யாணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் உண்மையில் தோனி விஜய்யை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டாராம். அதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு இருக்கிறார். ஆனால் பலன் தான் பூஜ்ஜியமாக போய்விட்டது.

Also read: நான் ஹீரோ, விஜய்க்கு வில்லனா நடிக்க முடியாது.. இயக்குனரை விரட்டி மைக் மோகன் செய்த பெரும் தவறு

அதாவது தன்னை சந்திக்க வந்த தோனிக்கு விஜய் வரவேற்பை எல்லாம் பலமாக கொடுத்திருக்கிறார். ஆனால் பட தயாரிப்பு பற்றி பேசும் போது யோசித்து சொல்கிறேன் என்று கூறினாராம். ஆனால் அதன் பிறகு அவரிடமிருந்து எந்த ஒரு பாசிட்டிவான பதிலும் தோனிக்கு கிடைக்கவில்லை. இனிமேல் காத்திருந்து பலன் இல்லை என்பதை புரிந்து கொண்ட தோனி விஜய்யை வைத்து படம் எடுக்கும் முடிவையே கைவிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் புளியங்கொம்புக்கு ஆசைப்பட்டு முருங்கைக் கொம்பை பிடித்து இருக்கிறார் தோனி. இருப்பினும் தற்போது எடுத்து வரும் LGM படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக டாப் ஹீரோ ஒருவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று அவர் பிளான் போட்டுள்ளாராம். அதற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: சினிமாவை கைவிடும் தளபதி விஜய்.. துணிச்சலான முடிவால், அதிரும் திரையுலகம்

Trending News