Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது ஜீவானந்தம் வந்த பிறகு விறுவிறுப்பாக போகும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று ஏமாற்றத்தை கொடுக்கிறது. இவரும் குணசேகரனுக்கு எந்த விதத்தில் சலச்சவங்க இல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அப்பத்தாவின் 40% சொத்துக்கு தான் ஆட்டையை போட பார்க்கிறார்.
ஏற்கனவே கதைப்படி எது வரணுமோ அதைத் தவிர எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டின் பெண்கள் சுதந்திரமாக நினைத்ததை செஞ்சு முடிக்கும் வேண்டும் என்பதை மையமாக இருந்தது. இதற்கு இடையில் அப்பத்தாவின் 40% சொத்துக்கு ஆசைப்பட்டு குணசேகரன் செய்யும் ஒவ்வொரு அட்டூழியத்தையும் தடுக்கும் விதமாக ஜனனியுடன் போராட்டம் ஆரம்பித்தது.
ஆனால் கடைசியில் அப்பத்தா கோமா ஸ்டேஜ்க்கு போன தான் மிச்சம். சரி அதன் பிறகாவது கதையே விறுவிறுப்பாக கொண்டு போவார்கள் என்று எதிர்பார்த்தால் ஆதிரை திருமணத்தை வைத்தே ஓட்டி வருகிறார்கள். அடுத்து அப்பத்தா கண் திறந்து பார்க்கும் போதெல்லாம் ஜீவானந்தம் பேரை சொன்னதை பார்க்கும் பொழுது இவர் மூலம் ஜனனிக்கு விடிவு காலம் பிறக்கும் என்று எதிர்பார்த்தால் அதற்கு எதிர்மறையாக இருக்கிறார்.
தற்போது ஜனனி அப்பத்தாவின் சொத்தை குணசேகரனிடம் இருந்து காப்பாற்றப் போகிறாரா அல்லது ஜீவானந்திடமிருந்து காப்பாற்ற போகிறார் என்பது தலையே சுற்ற வைக்கிறது. பாவம் எத்தனை பேர் தான் ஜனனி சமாளிக்க போறாங்களோ தெரியவில்லை. அடுத்ததாக ஆதிரை எந்த ஜென்மத்தில் யாருக்கு நல்லது பண்ணினாலோ தெரியலை கரிகாலன் மாதிரி ஒரு கணவன் அமைவதற்கு.
இதுல வேற ஆதிரை கரிகாலன் எனக்கு வேண்டாம் அருண் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். இதற்கு உதவியாக அந்த மருமகள்கள் வேற. எப்படியும் கடைசியில் ஆதிரை நினைத்தபடி அருண் திருமணம் நடக்கும். அதுக்கு ஏன் இவ்வளவு அக்கப்போர் தனம் பண்ணி ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போர் அடிக்க வைக்கிறீர்கள்.
இந்தக் கதையை சீக்கிரத்தில் க்ளோஸ் பண்ணிவிட்டு அடுத்து விறுவிறுப்பாக கதைக்கு வாருங்கள் என்று பார்ப்பவர்களை கெஞ்சும் படி சொல்ல வைக்கிறது. சீக்கிரத்தில் ஜீவானந்தம் வந்ததற்கு அர்த்தமாக அவருடைய கதையை பார்க்க இன்ட்ரஸ்டிங்கா கொண்டு வாருங்கள். ஆக மொத்தத்துல கடைசியில நாயகன் பட டயலாக் தான் ஞாபகம் வருது. ஜீவானந்தம் நல்லவரா கெட்டவரா தெரியவில்லையே.?