Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் தற்போது கோபியின் அல்டிமேட் காமெடியுடன் கதை நகர்கிறது. அதாவது இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் போல் ராதிகாவிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் கொடுமையான சூழ்நிலையில் கோபி எப்பொழுதும் பாக்கியாவை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அதாவது பழனிச்சாமிக்கு பாக்கியா மூலம் திருமணம் நடக்கப்போகிறது. ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டார். இவருடைய நினைப்பு பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் தான் கல்யாணம் நடக்கப் போவதாகவும் அதற்காக அந்த குடும்பமே சேர்ந்து அவர்களுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கப் போவதாக நினைக்கிறார்.
இதே நினைப்பில் இருந்ததால் என்னமோ கனவில் கூட இந்த ஞாபகம் தான். அதாவது பழனிச்சாமி பாக்கியாவை பொண்ணு பார்க்க வருவது போல அவருக்கு பாக்கியா டீ கொண்டு வந்து கொடுத்து ரொமான்ஸ் ஆக பார்த்து சிரிப்பது போல் இவருடைய கனவில் தோன்றுகிறது. இதை பார்த்து பதற்றத்துடன் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி முழிக்கிறார் கோபி. இவர் கண்ட பகல் கனவு பலித்திடுமோ.
இதற்கு கோபி பேசாம பாக்கியா கூட இருந்திருக்கலாம். பொதுவாக ஒரு பழமொழி உண்டு எப்பொழுதும் ஒன்னு பக்கத்தில் இருக்கும் போது அதனுடைய அருமை தெரியாது நம்மளை விட்டுக் விலகிப் போகும் போது தான் அதனுடைய மகத்துவம் புரியும். அப்படித்தான் கோபிக்கு பாக்கியாவின் அருமை புரிகிறது.
ஆனால் இவர் கண்ட கனவால் பயந்து போன கோபியை பார்த்து விடுகிறார் ராதிகா. பிறகு ராதிகா என்னாச்சு கோபி என்று கேட்க அதற்கு கனவில் பாக்கியாவிற்கு வேறு திருமணம் நடக்கப் போவதாக கனவில் வந்தது என்று சொல்கிறார். இதைக் கேட்டு ராதிகா சந்திரமுகியாக மாறுகிறார்.
அதாவது அப்படியே பாக்கியாவிற்கு ஒரு வேலை வேற திருமணம் நடந்தால் உங்களுக்கு என்ன வந்துச்சு. ஏன் இன்னும் உங்க மனசுல பாக்கியா தான் இருக்காங்களா என்று கேட்கிறார். அதற்கு கோபியின் ரியாக்சன் தெரியாத்தனமாக ராதிகாவிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறோமே என்பது போல் இருக்கிறது.