நாலா பக்கமும் ஜனனிக்கு வரும் பிரச்சனை.. சொத்துலையும், கல்யாணத்திலும் அடி வாங்கிய குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஆதிரை கல்யாணத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதோடு இதில் ஜீவானந்தம் எப்படிப்பட்டவர் என்ற முகத்திரையும் அனைவருக்கும் தெரியப் போகிறது. அதாவது அப்பத்தாவின் சொத்தை ஆட்டைய போட்ட பிறகு அவருடைய முழு டார்க்கட்டும் எஸ் கே ஆர் குடும்பத்தின் மேல் திசை திரும்ப போகிறது.

இதற்கு பகடைக்காயாக அருணை வைத்து கேம் ஸ்டார்ட் பண்ண போகிறார். அப்படி என்றால் ஜனனி ஏற்பாடு பண்ணின ஆதிரை அருண் திருமணத்தில் மிகப்பெரிய குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ஜனனியின் உண்மையான நண்பராக இருந்த கௌதம் இவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்.

அதனால் ஜனனிக்கு உண்மையாக இருப்பாரா அல்லது ஜீவானந்தத்திற்கு விசுவாசமாக இருக்கப் போகிறாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் ஏற்கனவே அப்பத்தாவின் கைரேகையை வாங்க முடியவில்லை என்ற உச்சகட்ட கோபத்தில் இருக்கும் குணசேகரன், தற்போது ஆதிரை திருமணமும் இவர் நினைத்தபடி கரிகாலன் கூட நடக்கவில்லை என்றால் இவருடைய கோபம் இன்னும் அதிகமாக இருக்கும்.

அதே நேரத்தில் கௌதமை அடிக்கடி ஒரு கும்பல் பாலோ பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக அது ஜீவானந்தத்தை பிடிப்பதற்கு போலீஸ் போடும் ஸ்கெட்ச். இவரை வைத்து ஜீவானந்தத்தை பிடித்து விடலாம் என்பதால் தான். அதனால் கரெக்ட்டா அருணை கூட்டிட்டு போகும் போது போலீஸாரால் இவர்கள் இருவரும் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இப்படி எல்லா விதத்திலும் யோசிக்கிற அளவுக்கு ஒவ்வொரு பிரச்சனைகளின் முடிச்சுகளால் கதையை கோர்த்து விட்டிருக்கிறார்கள். அதனால் எப்படி வேண்டுமானாலும் இந்த ஆதிரை கல்யாணத்தில் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அப்பத்தாவின் கைரேகையை வாங்கியதால் இதை வைத்து ஜீவானந்தம் என்ன பண்ணப் போகிறார்.

அடுத்ததாக குணசேகரன் ஆசைப்பட்ட 40% சொத்து விஷயத்திலும் அடி வாங்கியாச்சு ஆதிரை கல்யாண விஷயத்திலும் தோற்று நிற்கப் போகிறார். மேலும் ஜனனி, அப்பத்தாவிடம் இருந்து கைரேகையை வாங்கினது ஜீவானந்தம் தான் என்று எப்படி கண்டுபிடிக்க போகிறார். யார் இந்த ஜீவானந்தம் நல்லவரா கெட்டவரா? இப்படி ஜனனி மற்றும் குணசேகரனை வச்சு செய்கிறார்.