புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது ரொம்ப கஷ்டம்.. அவருடன் நடித்த நாட்களை மறக்க முடியாத ஹீரோயின்

Actor Ajith: அஜித் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளார். இப்போது லைக்கா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய காட்டிலும் அஜித்துக்கு அதிகமாக ரசிகர்கள் இருப்பதற்கு காரணம் அவருடைய குணம் தான். ரசிகர் கூட்டமே இல்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் தற்போது வரை இருந்து வருகிறார்கள். இதை பல பிரபலங்கள் பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். அஜித்திடம் பழக மிகவும் இலகுவானவர் என அவரைப் பற்றி பாராட்டி பேசி உள்ளனர்.

Also Read : அஜித் மீது நம்பிக்கை இல்லாத இயக்குனர்.. ஏ கே உடன் போட்ட அக்ரீமெண்ட்

இந்த சூழலில் அஜித் பட நடிகை ஒருவர் அவரைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது அஜித்துடன் உல்லாசம் படத்தில் நடித்தவர் நடிகை மகேஸ்வரி. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் என் வாழ்க்கையில் இப்படி ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை என அஜித்தை புகழ்ந்து தள்ளி உள்ளார்.

அஜித்தை பொறுத்தவரையில் நடிகர் என்பதை தாண்டி அவரிடம் நிறைய நல்ல விஷயங்கள் தன்னைக் கவர்ந்ததாக கூறியிருக்கிறார். அதாவது பெரியவர், சிறியவர் என்று பார்க்காமல் அனைவருக்கும் மரியாதை கொடுக்க கூடியவர். எல்லோரையும் மதித்து பணிவாக பேசக்கூடியவர்.

Also Read : டச்சப் பாயிலிருந்து விஸ்வரூபம் கண்ட 5 நடிகர்கள்.. அஜித்துக்கே ஹிட் கொடுத்த இயக்குனர்

அஜித்தை போன்ற ஒரு மனிதரை என் வாழ்க்கையிலோ, உன் குடும்பத்திலோ, சினிமாவிலோ எங்கேயுமே பார்த்ததில்லை. அவரைப் போல் ஒருவர் வாழ்வது ரொம்ப கடினம் என அஜித்தை பற்றி மெய்சிலிர்க்க அந்த பேட்டியில் பேசினார். அஜித் குடும்பத்துடன் இப்போதும் தான் போனில் பேசுவதாக கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி அஜித்தின் படங்கள் வெளியானால் முதல் நாளே திரையரங்குக்கு சென்று பார்ப்பதையும் மகேஸ்வரி வழக்கமாக வைத்திருக்கிறாராம். மேலும் இப்போது அஜித்தை படங்களில் பார்க்கும்போது ஹாலிவுட் ஹீரோ போல் இருப்பதாக கூறியுள்ளார். அவருடைய படத்தில் நானும் ஒரு ஹீரோயினாக நடித்ததை எண்ணி பெருமை கொண்டுள்ளார்.

Also Read : லைக்கா தலைமையில் மகிழ்திருமேனியை முடிக்கிவிட்ட அஜித்.. ஐ டி ரைட் ஆல் கதி கலங்கும் விடாமுயற்சி

- Advertisement -spot_img

Trending News