சினிமா செய்திகள்

தமன்னா போல் நடித்து கேரியரை தொலைத்த நடிகை.. 12 வருடத்திற்கு பின் செய்த தவறை நினைத்து விடும் கண்ணீர்

தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் அவர் 12 வருடங்களுக்குப் பிறகு அதை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.

By Vijay · 17 ஜூன் 2023 · Updated 09 மே 2025
actress-tamannaah

Actress Tamannah: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் பக்கம் தலையை காட்டியுள்ள தமன்னா சமீப காலமாகவே பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது அவர் கவர்ச்சி களத்தில் குதித்திருப்பது அவருக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

அந்த வகையில் இவரைப் போலவே நடித்த நடிகை ஒருவர் இப்போது தன் கேரியரையே தொலைத்து விட்டு நிற்கிறார். எப்படி என்றால் தமன்னா நடிப்பில் வெளியான ஜீ கர்தா என்ற வெப் தொடர் தான் இப்போது சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு படுமோசமான காட்சிகளில் நடித்திருக்கும் தமன்னாவை பலரும் கேவலமாக திட்டி தீர்க்கின்றனர்.

அந்த அளவுக்கு அவர் கண் கூசும் படியான காட்சியிலும், காது கொடுத்து கேட்க முடியாத வசனங்களையும் பேசி இருக்கிறார். மேலும் தமன்னாவா இது என்று பலரும் வாயை பிளக்கும் அளவுக்கு இருக்கும் அந்த வெப் தொடர் பற்றிய செய்தி தான் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இதன் மூலம் அவர் ஒரு ஐட்டம் நடிகையாக மாறிவிட்டதாக ஒரு கருத்தும் எழுதுள்ளது.

இது போதாது என்று அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2விலும் இப்படி ஒரு கவர்ச்சி தரிசனத்தை தான் தமன்னா கொடுக்க இருக்கிறார். இப்படியாக இருக்கும் இவரை போலவே தன் முதல் படத்தில் படுமோசமாக நடித்திருந்த அமலாபாலும் இப்போது எங்கு இருக்கிறார் என்ற அடையாளமே தெரியாமல் போய் உள்ளார்.

மைனா படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர் சிந்து சமவெளி என்ற படத்தில் படுமோசமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார். பலரையும் அதிர்ச்சி அடைய வைத்த அந்த கேரக்டர் அவருக்கு பின்னடைவாகவும் அமைந்தது. அதுதான் இப்போது வரை அவருடைய திரை வாழ்வில் ஒரு கரும்புள்ளியாகவும் இருக்கிறது.

அது மட்டுமின்றி ஆடை படத்தில் அவர் நடித்திருந்த விதமும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இப்படி வாய்ப்புக்காகவும், சம்பளத்திற்காகவும் ஓவராக நடித்து தன் பெயரை கெடுத்துக் கொண்டார் அமலா பால். தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் அவர் 12 வருடங்களுக்குப் பிறகு சிந்து சமவெளியில் நடித்ததை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.