சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

வாய்ப்பேச்சு மேடையோட போச்சு, சூர்யா இடத்தை பிடிக்க முடியாத விஜய்.. வெட்ட வெளிச்சமான நாடகம்

Vijay-Surya: சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் விஜய், சூர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள். தொழில் ரீதியாக இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் இப்போது தங்கள் வழிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் சூர்யா இடத்தை விஜய்யால் பிடிக்க முடியாது என்னும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது விஜய் சமீபத்தில் மாணவர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார். அது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கு நடந்த ஒரு விஷயம் தான் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வாய்ப்பேச்சு மேடையோடு போச்சு என்ற அளவுக்கு விஜய் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

Also read: ஆர்ப்பாட்டமே இல்லாமல் பணத்தை வாரி இறைக்கும் ஜிவி பிரகாஷ்.. விட்டா அடுத்த சூர்யா இடத்தை பிடிச்சுருவாரு போல

என்னவென்றால் அந்த மேடையில் ஒருவர் விஜய்யிடம் தனிப்பட்ட முறையில் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். அதாவது என்னுடைய தம்பியை நான் கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வைத்து விட்டேன். இந்த ஆண்டு என்னால் பீஸ் கட்ட முடியவில்லை நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

உடனே விஜய்யும் கவலை வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதை தொடர்ந்து அந்த நபரை அங்கு இருந்தவர்கள் வலுக்கட்டாயமாக மேடையை விட்டு இறக்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்வு முடிந்து சில நாட்கள் கடந்த பிறகும் கூட அந்த நபருக்கு விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லையாம்.

Also read: வெற்றியை கொண்டாட, விஜய் பரிசளித்த 5 பிரபலங்கள்.. 400 கோல்ட் ரிங் கொடுத்த தளபதி

அவரும் காத்திருந்து நொந்து போய் இருக்கிறார்கள். இதுதான் இப்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் விஜய் தன்னுடைய அரசியலுக்காக தான் மாணவர்களை பகடை காயாக உபயோகப்படுத்தி வருகிறார் என்றும் கூறுகின்றனர். இந்த ஒரு சம்பவமே அதை அப்பட்டமாக வெளிக்காட்டி இருக்கிறது.

அந்த நபர் சூர்யாவை சந்தித்து இருந்தால் உடனே அவருக்கான உதவி கிடைத்திருக்கும். ஏனென்றால் அவர் தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம் எத்தனை எத்தனையோ மாணவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார். இது அனைவரும் அறிந்தது தான். அந்த வகையில் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சூர்யா இடத்தை விஜய்யால் பிடிக்கவே முடியாது.

Also read: விஜய்க்கு போட்டியாக இறங்க நேரம் பார்க்கும் அஜித்.. ரமேஷ் கண்ணா வைத்த ட்விஸ்ட்

Trending News