ஒரே உருவ ஒற்றுமையில் இருக்கும் 2 நடிகர்கள்.. இன்றுவரை அடையாளத்துக்காக போராடும் சூப்பர் ஸ்டார் வில்லன்

Two Equally Talented Actors: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சிலர் கண்டெடுத்த முத்துக்களாக இருந்துள்ளனர். அதாவது எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், எப்படி கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்கும் இருவர் இன்று வரை தங்களின் அடையாளத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

நல்ல திறமைசாலியான நடிகர்களான இவர்கள் இருவரும் தங்களின் திறமையை நிரூபிக்கும் படி பல கதாபாத்திரங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களை மக்கள் கொண்டாட தவறிவிட்டனர். மேலும் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமையை உடையவர்கள்.

அதாவது வெயில் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய பசுபதி தான் இதில் ஒருவர். கூத்துப்பட்டரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த இவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்யாசம் தான். அந்த வகையில் விருமாண்டி படத்தில் கொத்தல்ல தேவர், அசுரனில் முருகேசன், சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் என பல கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குசேலன் படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு எல்லோரையும் கண்கலங்க செய்து விட்டது. இவரை போல உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நபர் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்தவர்.அதாவது ரஜினியின் கபாலி படத்தில் வீர சேகரன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார் கிஷோர் குமார்.

பசுபதியைப் போலவே இவரும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஈடு கொடுத்து விடுவார். அந்த வகையில் ஆடுகளம், ஹரிதாஸ், ஆரம்பம் போன்ற படங்களில் கிஷோர் குமார் வித்தியாசம் காட்டியிருப்பார். இவருக்கான அடையாளம் இதுவரை கிடைக்கவில்லை.

இவர்கள் இருவருமே சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்திருக்கிறார்கள். பசுபதிக்கு கூட ஓரளவு ரசிகர்கள் அங்கீகாரம் கொடுத்தாலும், தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என கிஷோர் குமார் தற்போது வரை ஓடிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக இவரும் ஒரு நாள் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.