சத்தம் இல்லாமல் காய் நகர்த்தும் ஹாரிஷ் கல்யாண்.. கல்யாணத்துக்கு பிறகு தொடர்ச்சியாக நடிக்கும் 5 படங்கள்

Actor Harris Kalyan: சமீபத்தில் திருமணம் ஆகி சினிமாவிற்கு இடைவெளி விட்டு தற்பொழுது ரீ என்ட்ரி கொடுக்கும் நோக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் ஹரிஷ் கல்யாண். இந்நிலையில் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் இவர் மேற்கொள்ளும் படங்களைப் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் தான் ஹரிஷ் கல்யாண். அதன்பின் பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் மூலம் பெரிதும் பேசப்பட்டார்.

மேலும் பிக்பாஸ் சீசன் ஒன்றில் இடம்பெற்று பட வாய்ப்பு தேடி வந்து இவர் 2018ல் பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்னும் படத்தில் நடித்தார். அதை பின்பு மாறுபட்ட கதாபாத்திரத்தில் இவர் ஏற்ற தாராள பிரபு கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

அதன் பின்பு 2022-ல் திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்பட்டார். தற்பொழுது ரீ என்ட்ரி ஆக அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார். அவ்வாறு பார்க்கையில், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து டீசல் என்னும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் எல்ஜிஎம் படத்திலும் கமிட்டாகி உள்ளார். நதியா, யோகி பாபு, இவானா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். மேலும் இப்படம் ரொமான்டிக் படமாக படப்பிடிப்பு முடிவடையை உள்ளது.

சசி இயக்கத்தில் 100 கோடி வானவில், மேலும் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ரப்பர் வந்து என்னும் படத்திலும் நடிக்க இருக்கிறார். அதை தொடர்ந்து ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் படத்திலும் நடித்து வருகிறார். சுமார் இரண்டு வருடத்திற்கு பிறகு இவர் மேற்கொள்ளும் இப்படங்களில் மூலம் பெரிதும் பேசப்படுவார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு முன்வைக்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →