90களில் கார்த்திக் உண்டாக்கிய தனி சாம்ராஜ்யம்.. ட்ராக்கை மாத்தி பல ஹீரோக்களுக்கு தண்ணி காட்டிய நவரச நாயகன்

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் அறிமுகமாகி புகழின் உச்சிக்கு சென்றவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக். பிரபல நடிகரின் வாரிசாக இருந்தாலும் முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்தாலும் அவரது அடுத்தடுத்த படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட கார்த்திக், அடுத்தடுத்து வரும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தில் இருபது நிமிடங்களே வரும் சிறிய கேரக்டரில் நடித்தார். அவருக்கு அந்த கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை கொண்டு மீண்டும் தமிழ் திரை உலகில் ஒரு ரவுண்ட் வந்தார்.

80 களில் ரஜினி கமலுக்கு பின் மூன்றாவது இடம் தனக்குத்தான் என கார்த்திக் போட்டி போட்டு நடித்தார். ஒரு கட்டத்தில் ரஜினி கமல் எல்லோரும் கிராமத்து சப்ஜெக்ட் படங்களில் கலக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு டஃப் கொடுக்க கார்த்திக் பாண்டிய நாட்டுத் தங்கம்,

நாடோடி பாட்டுக்காரன், பொன்னுமணி, நாடோடி தென்றல், முத்துக்காளை, கிழக்கு வாசல் போன்ற கிராமத்து படங்களில் நடிக்க துவங்கினார். மிக அற்புதமான கதாபாத்திரத்தை உள்வாங்கி ரொம்பவே யதார்த்தமாக நடிப்பதில் கில்லாடி என்று பெயர் எடுத்தார். அவர் படங்களில் பாடல்களும் அமர்க்களம். படமும் நூறு நாட்கள் இருநூறு நாட்கள் வெள்ளி விழா என்று ஓடின. துறு துறு, சுறுசுறு கிராமத்து இளைஞனாகவே மாறினார் கார்த்திக் என்றே சொல்ல வேண்டும்.

வருஷம் 16 என்ற படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்திருப்பார் குஷ்பூ. இந்தப் படத்தில் கண்ணன் என்ற கேரக்டரில் கார்த்திகை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு நடித்திருக்க முடியாது என்று பெயர் கிடைக்க ஆரம்பித்துவிட்டது அவருக்கு. கார்த்திக் குஷ்பூ காம்போ ரசிகர்களின் ஃபேவரட் ஆக மாறிவிட்டது. அதனை தொடர்ந்து பல படங்களில் கார்த்திக் ஜோடியாக நடித்தார் குஷ்பூ.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பொருந்தி போவார் கார்த்திக். எந்த ஹீரோயின் ஆக இருந்தாலும் பொருத்தமான ஜோடி என்று கொண்டாடினார்கள் ரசிகர். இவரின் நடை உடை பாவனை எல்லாம் இவரை தனித்துவம் மிக்க நடிகராகவும் நல்ல கலைஞராகவும் காட்டியது. கிழக்கு வாசல், பெரிய வீட்டு பண்ணக்காரன், சின்ன ஜமீன், தெய்வ வாக்கு, மேட்டுக்குடி போன்ற கிராமத்து சப்ஜெக்ட் படங்களில் எல்லா கேரக்டரிலும் ஆக்ஷனிலும் கலக்கினார்.

இவர் நான்கு முறை பிலிம்பேர் வருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 80 களில் சக நடிகர்கள் கிராமத்து படங்கள் நடிப்பதில் பின்வாங்கினார்கள். ஆனால் கார்த்திக் கிராமத்து படங்களை கையில் எடுத்து மூன்றாவது இடத்தை தனக்கெனத் தக்க வைத்துக் கொண்டார்.