புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஹீரோவைவிட வில்லன்களை பெரிதும் பேசப்பட்ட 5 படங்கள்.. கடைசி வரை நின்று அடித்த விஜய் சேதுபதி

Villain Vijay Sethupathi: வில்லன் கதாபாத்திரத்தில் இடம்பெறும் நடிகர்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவது வழக்கம், ஆனால் இன்றைய காலகட்டத்தில் படத்தில் ஹீரோவுக்கு கொடுக்கக்கூடிய அதே மாஸ் கெட்டப்பில் தான் வில்லன்களும் இடம் பெறுகிறார்கள்.

ஒரு சில படங்களில் ஹீரோக்களையே ஓரம் கட்டும் அளவுக்கு வில்லன்கள் டஃப் கொடுத்து இருப்பார்கள். அவ்வாறு கதாநாயகனை விட வில்லன்களை பிடித்த 6 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: சிங்கம் என்ன ரோபோவை அடக்கப் போகிறதா.? சூர்யாவை கிண்டலடித்து வம்பிழுக்கும் பிரபலம்

16 வயதினிலே: பாரதிராஜா இயக்கத்தில் வெற்றி கண்ட படம் தான் 16 வயதினிலே. இப்படத்தில் கமல், ஸ்ரீதேவி, ரஜினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வெகுளியான சப்பாணி கதாபாத்திரத்திற்கு எரிச்சல் ஊட்டும் விதமாக அவரை கிண்டல் செய்யும் பரட்டை கேரக்டரில் சிறப்புற நடித்திருப்பார் ரஜினி. இவர்கள் இருவரின் கூட்டணியில் இடம் பெற்ற இப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது.

கனா கண்டேன்: கே வி ஆனந்த் இயக்கத்தில் திரில்லர் பட பாணியில் வெளியான படம் தான் கனா கண்டேன். இப்படத்தில் ஸ்ரீகாந்த், கோபிகா, பிரித்திவிராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். புது முயற்சியை மேற்கொள்ள பிரித்திவிராஜ் இடம் கடனாய் பெறும் பணத்தால் ஏற்படும் சிக்கலை எதிர்கொள்ளும் விதமாக கதை அமைந்திருக்கும். இதில் டீசன்ட் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் பிரித்திவிராஜ்.

Also Read: மீண்டும் களத்தில் தீயாய் பாயும் அமீர்.. அடுக்கடுக்காக 4 படங்களில் பிஸியாக இருக்கும் வடசென்னை ராஜன்

முதல்வன்: ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கண்ட படம் தான் முதல்வன். இப்படத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் முதல்வராக இடம்பெறும் ரகுவரனின் வசனம் பெரிதளவு இக்கதாபாத்திரத்திற்கு பூர்த்தி செய்யும் விதமாக அமைந்திருக்கும். மேலும் இவரின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

மாஸ்டர்: 2021ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை கண்ட படம் தான் மாஸ்டர். இப்படத்தில் மூர்க்கத்தனமான பவானி கதாபாத்திரத்தில் இடம்பெறும் விஜய் சேதுபதியின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்திருக்கும். ஹீரோவாய் இடம்பெறும் விஜய்க்கு டஃப் கொடுக்கும் கேரக்டரில் கடைசிவரை நின்று அடிக்கும் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் விஜய் சேதுபதி.

Also Read: எல்லாரையும் தலையை சொறிய வைக்கும் H. வினோத்.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கமல்

தனி ஒருவன்: 2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தனி ஒருவன். இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தில் ஹீரோவுக்கு கொடுக்கக்கூடிய பில்டப்பை போல, வில்லனுக்கும் மிரட்டலான என்ட்ரி கொடுத்திருப்பார். பணத்திற்காக ஏது வேண்டுமானாலும் செய்யத் துணியும் கேரக்டரில் சிறப்புற நடித்திருப்பார் அரவிந்த்சாமி.

மாநாடு: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மாநாடு. இப்படத்தில் சிலம்பரசன், எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் டைம் லூப்பை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கும். போலீஸ் கேரக்டரில் இடம்பெறும் எஸ் கே சூர்யாவின் ரிபீட்டிங் டயலாக் படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

Also Read: ஓவர் தலைக்கனத்தில் ஆடும் டிடிஎஃப் வாசன்.. அடுத்த ஸ்லீப்பிங் ஸ்டாருக்கு சொம்படிக்கும் திரையுலகம்

Trending News