ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஆள விடுங்கடா சாமி என மாயமான பிரபாஸ்.. ராஜமவுலி எடுத்தா கூட என்னை விட்ருங்கப்பா

Actor Prabhas : ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படம் பாகுபலி மற்றும் பாகுபலி 2. எல்லா தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்து பல நாடுகளிலும் பல மொழிகளிலும் இந்த படம் வசூல் சாதனை படைத்ததுடன் நல்ல வரவேற்பையும் பெற்றுத்தந்தது. தமிழிலும் இந்தப் படத்தினால் பிரபாஸுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டானது.

இதன் பிறகு பிரபாஸ் சாகோ என்ற படத்தில் நடித்தார் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இந்தப் படம் வரவேற்பை பெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஓம்ரவத் இயக்கத்தில் பிரபாஸ் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வந்தார். ரூபாய் 600 கோடிக்கு மேல் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படத்தில் பிரபாஸுடன் சையிப் அலிகான், கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்திருந்தனர்.

Also Read : பாகுபலிக்கு பின் தொடர்ந்து 3 படுதோல்வி படங்கள்.. பிரபாஸை மலை போல் நம்பி இருக்கும் அடுத்த நான்கு படங்கள்

ராமாயணக் கதையை எடுக்கிறேன் பேர்வழி என்று இயக்குனர் ஓம் ரவத் பிரம்மாண்டமாக ஒவ்வொரு காட்சிகளையும் படமாக்கி இருந்தார். படம் ரிலீஸ்க்கு முன்பே படத்தின் டீசர் பார்த்து விமர்சனங்கள் பிறந்தன. இருப்பினும் படம் ரிலீஸான பிறகு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று பார்த்தால், பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளை தவிர படத்தில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் பல சொதப்பல்களால் ரசிகர்களிடையே மொக்கை வாங்கியது ஆதிபுருஷ் திரைப்படம்.

மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அளவுக்கு வசூல் சாதனை இல்லை என்றாலும் ஓரளவு முதல் மூன்று நாட்களிலேயே போட்ட காசுக்கு பலன் கிடைத்தது. அதன் பின் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் கணிசமாக குறையவே பிரபாஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்று தான்சொல்ல வேண்டும்.

Also Read : ஆதிபுருஷ் 2ம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கா.. பிரபாஸின் பதில் என்ன தெரியுமா?

சமீப காலமாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது ஒரு பேஷன் ஆகி போனதால், இந்த ஆசை இயக்குனர் ஓம்ரவத்தை பிடித்துக் கொண்டது. பிரபாஸிடம் இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய பேச்சை எடுத்து விட்டிருக்கிறார். அவ்வளவு தான் ஆள விடுங்கப்பா சாமி! என்று பிரபாஸ் தலை தெறிக்க ஓடிவிட்டார்.

பிரபாஸின் கைவசம் ப்ராஜெக்ட் K, சலார் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ராஜமெளலியே வந்தாலும் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் வேண்டாம் என எஸ்கேப் ஆகி விட்டார் நடிகர் பிரபாஸ்.

Also Read :  ஆதிபுருஷ் கொடுத்த மரண அடி.. 1000 கோடி இயக்குனரால் தல தப்பிய பிரபாஸ்

Trending News