திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாசக்கணக்கில் காக்க வைத்த விடாமுயற்சி.. 13 வருடங்களுக்குப் பிறகு டபுள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்

Actor Ajith: துணிவு படம் வெளியான சூட்டோடு ஆரம்பித்திருக்க வேண்டிய படம் இன்னும் துவங்கப்படாமல் இருக்கிறது. அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் படம் இன்னும் ஆரம்பித்த பாடில்லை.

இப்போது முன்னணி நடிகர்கள் பலரும் ஒரு படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே அடுத்த படத்தை ஆரம்பித்து புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் துணிவு ரிலீஸ் ஆகி ஆறு மாதங்கள் தாண்டிய பிறகும் கூட அஜித் அடுத்த படத்தில் நடிக்காமல் இருப்பது ரசிகர்களை ரொம்பவே சோதிக்கிறது.

Also read: பட வாய்ப்புக்காக நாய்க்குட்டியை தூக்கிட்டு நாலு நாள் அலைந்து திரிந்த எஸ் ஜே சூர்யா.. சுக்கு நூறாக உடைந்து போன அஜித்

இப்ப வருமோ, அப்ப வருமோ என அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருந்தே அவர்கள் நொந்து போகின்றனர். இவ்வாறு பல மாதங்களாக தன் ரசிகர்களை காக்க வைத்த அஜித் விடாமுயற்சி மூலம் டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கிறார். நிச்சயம் இது ரசிகர்கள் எதிர்பாராத ஒன்றுதான்.

என்னவென்றால் விடாமுயற்சி படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன்பே அஜித் வில்லன், வரலாறு, வாலி போன்ற பல திரைப்படங்களில் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அசல் படத்திற்கு பிறகு அவர் இது போன்ற சப்ஜெக்டுகளில் நடிக்கவில்லை.

Also read: மலை ஏறினாலும் மச்சான் தயவு வேண்டும்.. அஜித்தால் நொந்து போன ரிச்சர்ட்

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவர் இரு வேடங்களில் நடிக்கிறார். இந்த செய்தி தான் இப்போது மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் இதுவரை அப்டேட்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி குதூகலத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பல குளறுபடிகளின் காரணமாக படப்பிடிப்பை தள்ளி போட்டு இருக்கும் லைக்கா விரைவில் அனைத்தையும் சரி செய்து விட்டு ஷூட்டிங்கை துவங்க இருக்கின்றனர். அந்த வகையில் அஜித் இப்படத்திற்காக தன்னுடைய எடையை குறைத்து வேற ஒரு தோற்றத்தில் ரசிகர்களை காண இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: 90% வெற்றி மற்றும் வெள்ளி விழா கொடுத்த இயக்குனர்.. 4 படங்களில் கேள்விக்குறியான அஜித் இயக்குனர்

Trending News