வடிவேலு நல்லவரு, அஜித் ஈகோ புடிச்ச ஆளு.. வைகை புயலை இம்ப்ரஸ் செய்ய கூவும் நடிகர்

Actor Ajith: அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இது சில சமயங்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதே கிடையாது. இருப்பினும் இவரைப் பற்றி யாரும் தப்பாக விமர்சிப்பது கிடையாது.

இந்நிலையில் காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் அஜித் பற்றி கூறியிருக்கும் ஒரு செய்தி பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது பல வருடங்களாக வடிவேலு, அஜித் படத்தில் நடிப்பது கிடையாது. இதற்கு முக்கிய காரணம் வடிவேலுவின் துடுக்குத்தனமான பேச்சு அஜித்திற்கு பிடிக்கவில்லை என்பதுதான். இது குறித்த ஏராளமான செய்திகள் வெளி வந்திருக்கிறது.

ஆனால் டெலிபோன் ராஜ் அதை முற்றிலுமாக மறுத்திருக்கிறார். அதாவது ஒரே இடத்தில் வேலை செய்யும் போது நண்பர்களாக பழகுவதில் என்ன தப்பு இருக்கிறது. அப்படித்தான் எங்க தலைவர் வடிவேலு அஜித்தை பெயர் சொல்லி கூப்பிட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு அவர் ஈகோ பார்த்து இருக்கிறார்.

மேலும் அஜித் ஒன்றும் வயதானவர் கிடையாது, வடிவேலுவை விட சிறியவர்தான். அப்படி இருக்கும்போது பேர் சொல்லி கூப்பிடுவதில் என்ன தப்பு இருக்கிறது. இதனால் தான் வடிவேலுவை அவர் படத்தில் கமிட் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன். தான் செய்யும் உதவிகள் பிறருக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே செய்வார்.

எந்த பொது நிகழ்விலும் கலந்து கொள்ளாத இவர் தன் போட்டோவை மட்டும் வெளியிட்டு பப்ளிசிட்டி தேடி கொள்கிறார் என தாறுமாறாக அவர் அஜித் பற்றி பேசி இருக்கிறார். இதுதான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இவ்வளவு பேசும் டெலிபோன் ராஜ் வடிவேலுவை பெயர் சொல்லி அழைத்தால் என்ன நடக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

சம வயது உடையவராக இருந்தாலும் வடிவேலு எந்த அளவுக்கு ஈகோ பிடித்தவர் என்பதை பல பிரபலங்கள் கூறியிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது வாய்ப்புக்காகவும், வைகை புயலை இம்ப்ரஸ் செய்வதற்காகவும் அவர் இவ்வாறு பேசியிருப்பது விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அஜித் பற்றி எதுவும் தெரியாமல் இப்படி கண்டபடி உளறி கொட்டும் இவரை தற்போது ரசிகர்கள் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கின்றனர்.