1. Home
  2. கோலிவுட்

இந்த பூனையும் பால் குடிக்குமா? 12 மணிக்கு நடிகைக்கு போன் செய்த தனுஷ்

இந்த பூனையும் பால் குடிக்குமா? 12 மணிக்கு நடிகைக்கு போன் செய்த தனுஷ்
தனுஷ் ஒரு நடிகைக்கு 12 மணிக்கு போன் செய்ததாக பிரபலம் ஒருவர் கூறி பரபரப்பை கிளம்பி உள்ளார்.

Dhanush: தனுஷ் ஆரம்பத்தில் கதாநாயகனாக நடிக்கும் போது பலர் கேலி, கிண்டல் செய்த நிலையில் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுவும் தமிழ் நடிகர்கள் பலரும் சாதிக்க முடியாத சில விஷயங்களும் தனுஷ் செய்து காட்டி இருக்கிறார். ஹாலிவுட், பாலிவுட் என அவர் செல்லாத இடமே இல்லை.

இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் தனுஷும் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும் சமீபத்தில் இருவரும் மனம் ஒத்து பிரிய உள்ளதாக அறிவித்தனர். இது திரை வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமின்றி இதற்கு பல்வேறு காரணங்களும் இணையத்தில் உலாவ தொடங்கியது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் பயில்வான் தனுஷை பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது தன்னுடைய படத்தில் நடிக்கும் நடிகைகளை வேட்டையாட கூடியவர் தனுஷ். ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நடிகையை மாற்றிக் கொண்டே இருப்பார். அதுமட்டுமின்றி அவர்களிடம் நன்றாக வேலையையும் வாங்கிக் கொள்வார்.

மேலும் பிரபல நடிகை ஒருவரின் விவாகரத்திற்கு காரணம் தனுஷ் தான் என்று பலர் கூறி நாம் கேட்டிருக்கிறோம். அதாவது திருமணத்திற்கு பிறகு இரவு 12 மணிக்கு கணவர் பக்கத்தில் இருக்கும் போது அந்த நடிகைக்கு போன் செய்து தனுஷ் பேசியிருக்கிறார். இதுவே அந்த கணவன், மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்ட காரணமாக இருந்து உள்ளது.

இவர்களுக்குள் நாளுக்கு நாள் சண்டை அதிகரிக்க ஒரு கட்டத்தில் மேல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இவ்வாறு பல நடிகைகளின் வாழ்க்கை நாசமாக தனுஷ் தான் காரணம் என்று வெட்ட வெளிச்சமாகவே பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

இப்படி பெண்கள் விஷயத்தில் வீக்கானவராக இருந்தாலும் நடிப்பில் அரக்கன் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மனிதனுக்கு சில பலவீனம் இருக்கும்போது தான் நல்ல பலசாலியாக இருக்கக்கூடும். அவ்வாறு தனுஷ் சில விஷயங்களை அப்படி இப்படி இருந்தாலும் நடிப்பில் அவரை அடுச்சுக்கவே முடியாது என பயில்வான் கூறியுள்ளார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.