திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விடாமுயற்சியால் பிடித்த ஏழரை சனி.. நம்பிய இயக்குனரும் அஜித்தை கைவிட்ட பரிதாபம்

Actor Ajith: துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை ஏழரை சனி போட்டு ஆட்டி வருகிறது. அதாவது துணிவு படத்தை பொருத்தவரையில் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்தவுடன் நல்ல வசூலையும் ஈட்டியது. ஆனால் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்தார். லைக்கா நிறுவனத்திற்கு இவருடைய கதை பிடிக்கவில்லை.

அதன் பிறகு ஏகே 62 படத்திற்கு மகிழ்த்திருமேனியை லாக் செய்து விடாமுயற்சி என்ற டைட்டிலும் விடப்பட்டது. தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது. இதனால் அஜித் மிகுந்த அப்செட்டில் இருக்கிறார். இந்த சூழலில் அவருடைய ஆஸ்தான இயக்குனர் ஒருவரும் அவரை கைவிட்டு விட்டார்.

Also read: அஜித் பட வாய்ப்பை பரிகொடுத்த இயக்குனர்.. விஷால் தந்தையால் ஏற்பட்ட சங்கடம்

அதாவது அஜித்தை பொறுத்தவரையில் தனக்கு ஒரு இயக்குனர் பிடித்து விட்டால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கே கொடுத்து வருவார். அப்படிதான் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து மூன்று படங்களை வினோத்துக்கு கொடுத்திருந்தார். சிறுத்தை சிவாவுக்கும் தொடர்ந்து நான்கு படங்களை அஜித் கொடுத்திருந்தார்.

அதாவது வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் என நான்கு படங்களும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஒரு படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் அடுத்ததாக தரமான ஹிட் கொடுத்துவிட்டு தான் அந்த இயக்குனரிடம் இருந்து அஜித் விடை பெறுவார். இந்நிலையில் சிறுத்தை சிவா தற்போது கங்குவா படத்தை இயக்கி வருகிறார்.

Also read: இது வெறும் ஆரம்பம், இனிமேதான் ஆட்டமே இருக்கு.. ஓவர் பில்டப்பில் வெளிவந்துள்ள ஜவான் வீடியோ

சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து விட்டது. இந்த சூழலில் அடுத்ததாக சிறுத்தை சிவா அஜித்தின் படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. இப்போது மீண்டும் சூர்யா உடனே சிறுத்தை சிவா கூட்டணி போட உள்ளாராம். அதுவும் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்.

ஆகையால் இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்க உள்ளனர். அதன் பிறகு தான் அஜித் படத்தை இயக்கலாமா என்ற முடிவுக்கு சிறுத்தை சிவா வர உள்ளாராம். ஆரம்பத்தில் இவரை வளர்த்து விட்ட அஜித்தையே இப்போது சிறுத்தை சிவா டீலில் விட்டுள்ளார். இதுதான் வளர்த்த கெடாவே மாரில் முட்டுவது போல.

Also read: பில்லா கெட்டப்பில் 17 வருடம் கழித்து என்ட்ரி கொடுத்த நயன்தாரா.. ஒரே வீடியோவில் த்ரிஷா மார்க்கெட் காலி

Trending News