ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஓவரா ஆட்டம் போடும் விஜய்யின் வலது கை.. தளபதியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் மாறும் சம்பவம்

Actor Vijay: நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்ட விஜய், தற்பொழுது அரசியலும் களம் இறங்கி விட்டார். இந்நிலையில் இவரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் மாறும் சம்பவம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது அரசியலில் தன் தீவிர முயற்சியை போட்டு வருகிறார். ஏற்கனவே சினிமாவில் இவருக்கு என ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில், தற்போது அரசியலிலும் இவர் கட்சியில் சேர ரசிகர்கள் முன் வருகின்றனர்.

Also Read: 16 வருடமாகியும் புதுப்பொலிவுடன் இருக்கும் வேட்டையாடு விளையாடு.. வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு

அவ்வாறு தற்பொழுது நடைபெற்ற 234 தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஏற்கனவே மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்ட விஜய்யின் செயலுக்கு மக்களுடைய பேராதரவு கிடைத்தது. தற்பொழுது பனையூரில் உள்ள விஜய்யின் பங்களாவில் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் விஜய்யை காண நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர் ரசிகர்கள். பிறகு கூட்டம் என்றாலே பிரியாணி கிடைக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு, விஜய் வெறும் சைவ விருந்து கொடுத்து ஷாக் அளித்திருக்கிறார். மேலும் கூட்டத்தில் சாப்பிட ஆள் இல்லாமல் அப்படியே கீழே போடும் நிலைமைக்கு உருவாகியதாம்.

Also Read: ஜீவானந்தத்தின் பிளானை நோட்டமிடும் கௌதம்.. நாளா பக்கமும் அடிவாங்கும் குணசேகரன்

இது ஒரு புறம் இருக்க, விஜய்யின் வலது கை என அழைக்கப்படும் புஸ்ஸி ஆனந்த் கூட்டத்தில் நடந்து கொண்ட சம்பவம் குறித்த தகவல் தற்பொழுது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது. புஸ்ஸி ஆனந்த் மீது உள்ள நம்பிக்கையின் பொறுத்து, விஜய் தன் அடுத்த கட்ட செயல்களை ஈடுபட்டு வரும் நிலையில், இவர் மற்ற நிர்வாகிகளை மிரட்டுவது மேலும் ரசிகர்களை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது விஜய் ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கியது.

அதுவும் முன்பு இருந்தவாறு இல்லாமல் மாறுபட்ட நடவடிக்கையை வெளிக்காட்டும் புஸ்ஸி ஆனந்தின் இத்தகைய ஆர்ப்பாட்டம் சற்று ஓவராகவே காணப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆட்களை கூட வைத்திருந்தால் விஜய்யை, இன்னும் மக்கள் காமெடியாகவே பார்ப்பார்கள் எனவும் பேச்சுவார்த்தை அடிபட்டு வருகிறது. இது போன்ற ஆட்களால்தான் விஜய்யின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் மாறும் எனவும் பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.

Also Read: டிஆர்பியில் முந்த ‘எதிர்நீச்சல்’ குணசேகரனுக்கு விஜய் டிவி விரித்த வலை.. எந்த சீரியலுக்கு தெரியுமா?

Trending News