ஓபன் நாளில் பட்டைய கிளப்பிய 7 படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளிய துணிவு

Open Day Collection: ஒரு படத்தின் வெற்றியை, மக்களின் விமர்சனங்களை கொண்டு சொல்லலாம். அதையும் தாண்டி, திரையரங்கில் வெளியாகும் படத்தின் வசூலை கொண்டே படம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை தீர்மானிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஓபன் நாளிலே வசூலில் பட்டைய கிளப்பிய 7 படங்கள் பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் தான் பத்து தல. கேங்ஸ்டர் படமாக பல எதிர்பார்ப்புகளை முன்வைத்த இப்படத்தின் முதல் நாள் வசூல் ஆன சுமார் 5.63 கோடியை அள்ளியது. அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படம் தெலுங்கிலும், தமிழிலும் ஒரே நாளில் வெளியானது.

தமிழில் ஓபன் நாளில் சுமார் 5.80 கோடியை வசூலித்தது. இந்த பட்டியலில் அடுத்து நாம் பார்க்க போவது வடிவேலு, உதயநிதி நடிப்பில் வெளிவந்த மாமன்னன் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இருப்பினும் முதல் நாள் அன்று இப்படத்தின் வாசல் ஆனது சுமார் 7.12 கோடி என கூறப்படுகிறது.

சமீபத்தில் ரிலீசான சிவகார்த்திகேயனின் படமான மாவீரன் பல எதிர்பார்ப்புகளை உண்டுபடுத்தி வருகிறது. இந்நிலையில் இதன் ஓபன் நாளில் கிடைத்த வசூல் சுமார் 7.61 கோடியாம். மேலும் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால், இதன் வசூல் வரும் நாட்களில் அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தின் ஹைப் அதிகமாக உள்ள நிலையில், விஜய்யின் வாரிசு படத்தின் ஒரு நாள் வசூல் சுமார் 19.43 கோடி. இப்படத்தின் வசூலை லியோ முறியடிக்குமா என்ற கேள்வியையும் முன்வைத்து வருகிறது.

அதை தொடர்ந்து வரலாற்று காவியத்தை தழுவிய படமான பொன்னின் செல்வனின் ஓபன் நாள் வசூல் ஆனது சுமார் 21. 37 கோடி எனக் கூறப்படும் நிலையில், இதை முறியடிக்கும் விதமாய் அஜித்தின் நடிப்பில் தெறிக்க விட்ட படமான துணிவு படத்தின் ஓபன் நாளில் சுமார் 24. 59 கோடியை வசூலித்து நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. இனி வரும் படங்கள் இவற்றின் ஓபன் நாள் வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →