சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

எம்ஜிஆர் இயக்கிய முதல் கலர் படம்.. 800 மடங்கு லாபத்தை பார்த்து படைத்த சரித்திரம்

Actor MGR: தன்னுடைய தனித்துவத்தால் நடிப்பிலும், அரசியலிலும் கொடி கட்டி பறந்தவர் தான் எம்ஜிஆர். ஆரம்பத்தில் திரை உலகம் இவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தன் திறமையை வெளிக்காட்டியே தீர வேண்டும் என இவர் செய்த செயல் குறித்த தகவலை இங்கு காண்போம்.

அவ்வாறு நாடகத்துறையில் நடித்து வந்து அதன்பின் சினிமாவில் வாய்ப்பு பெற்ற ஜாம்பவான் தான் எம்ஜிஆர். இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில், முதல் முதலில் இவர் இயக்கி நடித்த படம் தான் நாடோடி மன்னன். என்ன இவர் படம் இயக்கப் போறாரா என கேலி செய்தவர்களுக்கு வியப்பூட்டும் விதமாய் அமைந்தது இப்படம்.

Also Read: புகழின் உச்சிக்கு சென்ற பின் தலைமறைவான 5 நடிகர்கள்.. சாக்லேட் பாயாக வசியம் செய்த அப்பாஸ்

பானுமதி, சரோஜாதேவி, பிஎஸ். வீரப்பா, நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தன் சொந்த படம் என்பதால் எம்ஜிஆர் இப்படத்தை மேற்கொள்ள தன் அனைத்து சொத்துக்களையும் விற்று சுமார் 18 லட்சம் ரூபாய் முதலீட்டில் இப்படத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் தன் படம் என்பதால், தனக்கு திருப்தி ஏற்படும் வரை டேக் எடுத்து இப்படத்தை மேற்கொண்டாராம். அவ்வாறு தன் கடும் உழைப்பினை போட்டிருக்கிறார் எம்ஜிஆர். இவரின் இத்தகைய முயற்சியை ஈடுகட்ட முடியாமல் பானுமதியை பாதியிலேயே, இறக்கும் காட்சியை மேற்கொண்டு அனுப்பி விட்டாராம்.

Also Read: பலான காட்சிகளால் கொட்டிய பண மழை.. வியக்க வைத்த சன்னி லியோனின் சொத்து மதிப்பு

அதன்பின் தான் சரோஜாதேவி இப்படத்தின் முக்கிய நாயகி ஆக வலம் வந்திருக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லத்தனத்திற்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக வீரப்பா மற்றும் நம்பியாரை நடிக்கச் செய்தாராம். அவ்வாறு பார்த்து, பார்த்து இயக்கிய இப்படம் சுமார் 3 1/4 மணி நேரம் திரையில் ஓடியதாம்.

மேலும் இப்படம் பாதி கருப்பு வெள்ளை படமாகவும், மீதி பாதி கலர் படமாகவும் எடுக்கப்பட்டதாம். அதிலும் குறிப்பாக 18 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 800 மடங்கு லாபத்தை கொண்டு 1 கோடியை ஈட்டியதாம். மேலும் இப்படத்தில் இடம் பெற்ற அரசியல் வசனம் எம்ஜிஆரின் அரசியலுக்கு அடித்தளமாகவும் பார்க்கப்பட்டது.

Also Read: கல்யாணத்தை வைத்து கல்லா கட்ட நினைத்த தூங்கும் ஸ்டார்.. புளியங்கொம்பை பார்த்து புடிச்ச அஸ்வின்

- Advertisement -spot_img

Trending News