புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

உண்மையான பெயரை வைத்து எழுதப்பட்ட 7 நடிகைகளின் பாடல்கள்.. தலைவர் ஜோடி போட்டு ஆடிய கொண்டையில் தாழம்பூ – குஷ்பூ

Songs of 7 actresses: தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்காகவே எழுதப்பட்ட பாடல்களில் அவர்களே தோன்றி நடித்து உச்சி குளிர்ந்தனர். அப்படி ஸ்ரீதேவி முதல் குஷ்பு வரை அவர்களுக்கென்று நல்ல பாடல்கள் லக்காக அமைந்திருக்கிறது. அதிலும் தலைவருடன் குஷ்பூ போட்ட டூயட் பாடலான ‘கொண்டையில் தாழம்பூ’ பாடலை இன்றும் மறக்க முடியாது.

ஸ்ரீதேவி : 70களில் முன்னணி நடிகையாக கலக்கிய கதாநாயகி தான் ஸ்ரீதேவி. அதிலும் இவர் நிறைய படங்களில் கமலுடன் சேர்ந்து நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்காகவே இவர் நடித்த படங்களில் 2 பாடல்களை எழுதி அவரையே ஆட வைத்து அழகு பார்த்திருக்கின்றனர்.

வாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவியை நினைத்து கமல் கோயிலில் பாடும் போது அந்த பாடலில் இடம்பெற்ற ’தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்தொறு வார்த்தை சொல்லிவிடம்மா’ என்ற வரிகளில் ஸ்ரீதேவியின் உண்மையான பெயர் இடம் பெற்று இருக்கும். அதே வாழ்வில் மாயம் படத்தில் இடம்பெற்ற ‘நீல வான ஓடையில் நீந்துகின்ற’ என்ற பாடலின் இடையில் ‘ஸ்ரீதேவியை என் ஆவியே’ என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும்.

ராதா: 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதாவிற்கும் ஜப்பானில் கல்யாணராமன் என்ற படத்தில் கமலுடன் ஆடிய டூயட் பாடலான ‘ராதா என் ராதே’ என்ற பாடலிலும், கண்ணே ராதா என்ற படத்தில் நவரச நாயகன் ராதாவுடன் இணைந்து பாடிய ‘மாலை சூட கண்ணே ராதா நாள் வாராதா கைகள் தோல் தொடாத’ என்ற பாடலிலும் ராதாவின் நிஜ பெயர் இடம் பெற்று அவரை குளிர்வித்தது.

Also Read: ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்.. சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை

சில்க் ஸ்மிதா: இவர் திரையுலகில் இருந்த 17 வருட வாழ்க்கையில் 450 படங்களுக்கு மேல் நடித்து கவர்ச்சி புயலாக வலம் வந்தவர். இவர் கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார் என்பதற்காகவே அந்தப் படத்தை பார்ப்பதற்கு இளசுகள் திரையரங்கில் குவிந்தனர். அப்படிப்பட்ட சில்க் ஸ்மிதாவிற்காகவே கமலஹாசனின் சூப்பர் ஹிட் படமான சகலகலா வல்லவன் படத்தில் ‘சின்ன உடல் சில்க்கு’ என்ற பாடலில் அவருடைய பெயர் இடம் பெற்று அவருக்காகவே எழுதப்பட்ட பாடல் போலவே இருந்தது.

ரூபினி: ரூபினி: 1987 முதல் 1994 வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரூபினி. 90ல் உலக நாயகன் கமலஹாசன் அதிரடியாக மைக்கேல், மதனகோபால், காமேஸ்வரன், ராஜூ போன்ற 4 வேடங்களில் ‘மைக்கேல் மதன காமராஜர்’படத்தில் நடித்து அசத்தினார். இந்தப் படத்தில் தான் ஜக்குபாய் என்ற கேரக்டரில் நடிகை ரூபினி நடித்தார். அதிலும் இந்த படத்தில் கமலஹாசன் உடன் ரூபினி கவர்ச்சியாக ஆடிய சிவராத்திரி என்ற பாடலில் ‘தேமாங்கனி தேவ ரூபினி’ என்ற வரிகளில் அவருடைய பெயர் இடம் பெற்றிருக்கும்.

Also Read: கமல் – மனோரமா காம்போவில் மனதில் நிற்கும் 6 படங்கள்.. கடைசி நேரத்தில் கேரக்டர் மாற்றப்பட்ட படம்

நதியா: 80களில் டாப் நடிகர்களுடன் ரவுண்டு கட்டி நடித்து கொண்டிருந்த முன்னணி நடிகை தான் நதியா. இவர் படத்தில் அணிந்திருக்கும் கிளிப் முதல் ஹேர் ஸ்டைல் வரை செம ஃபேமஸ் ஆகும். அதிலும் இளசுகளின் பேவரைட் ஹீரோயின் ஆக இருந்த நதியாவை கௌரவிக்கும் விதமாகவே பூமழை பொழியுது என்ற படத்தில் நடிகர் சுரேஷ் உடன் நதியா டூயட் ஆடிய ‘நதியா நதியா நைல் நதியா’ என்ற பாடலிலும் பூவே இளம் பூவே என்ற படத்தில் சுரேஷ் நதியாவை வர்ணித்து பாடிய ‘புது நதியா மது நதியா’ என்ற பாடலிலும் அவரது நிஜ பெயர் இடம் பெற்றிருக்கும்.

பானுப்பிரியா: 80களில் முட்ட கண்ணு அழகி என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட பானுப்பிரியா, ‘சக்கரவர்த்தி’ என்ற படத்தில் ‘கன்னத்துல போட்டுகிறேன் மன்னிப்பு தான் கேட்டுக்குறேன் பானு’ என்ற பாடலில் நவரச நாயகனை கெஞ்ச விட்டார். இதில் பானுவின் பெயரை சொல்லி கார்த்தி ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்டார்.

Also Read: வறுமையை வைத்து எடுக்கப்பட்ட மறக்க முடியாத 5 படங்கள்.. வேலையில்லா இளைஞரின் பசி கொடுமையை காட்டிய கமல்

குஷ்பூ: பப்ளியாகவும் செம க்யூட் ஆகவும் ரசிகர்களை கவர்ந்த குஷ்பூ தலைவர் ரஜினியுடன் அண்ணாமலை படத்தில் ‘கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன குஷ்பூ’ என்ற பாடலில் டூயட் ஆடினார். இந்தப் பாடலில் குஷ்புவின் பெயரை அடிக்கடி ஒலிக்க விட்டனர். 175 நாட்கள் ஓடி சாதனை படைத்த இந்தப் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலும் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் இருக்கிறது.

Trending News