கேத்ரினா கைஃப்-க்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்தாரா விஜய் சேதுபதி.? பயில்வான் போல் போட்டுடைத்த பிரபலம்

Actor Vijay Sethupathy: ஒரு நடிகராக இருந்தாலும் சோசியல் மீடியா மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற பயில்வான் பல விஷயங்களை தைரியமாக பேசக் கூடியவர். அதிலும் யூடியூப் சேனல் மூலம் பல பிரபலங்களின் அந்தரங்க ரகசியத்தை போட்டு உடைப்பது தான் இவருடைய ஸ்பெஷல்.

இவரைப் போலவே பாலிவுட்டிலும் ஒருவர் இருக்கிறார். உமர் சந்து என்ற பிரபலம் தன் சோசியல் மீடியா பக்கத்தில் நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகளை பற்றிய ரகசியங்களை தினமும் பதிவிடுவார். பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்கள் தான் இவரின் டார்கெட்டாக இருப்பார்கள்.

சில சமயம் தமிழ், தெலுங்கு பிரபலங்களும் அதில் சிக்குவார்கள். அப்படித்தான் தற்போது விஜய் சேதுபதி பற்றி அவர் போட்டுள்ள பதிவு அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இப்போது ஹிந்தி திரை உலகிலும் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்று வரும் விஜய் சேதுபதி ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து கேத்ரினா கைஃப்புடன் இவர் நடிக்கும் மேரி கிறிஸ்மஸ் என்ற படமும் உருவாகி வருகிறது. அந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி ஹீரோயினுக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்ததாக உமர் சந்து பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி அப்படி கிடையாது. தேவையில்லாமல் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவருடைய பாலிவுட் வளர்ச்சியை தடுக்க தான் இது போன்ற தகவல்கள் பரவி வருவதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளது.

சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் மிகவும் எதார்த்தமான குணத்துடன் இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சூழலில் இப்படிப்பட்ட கருத்துக்கள் வெளிவருவது அவருக்கான பின்னடைவாக அமைந்துள்ளது. விரைவில் இது குறித்த விளக்கத்தை அவர் தனது சார்பில் இருந்து கொடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.