ரிலீசுக்கு முன்பே பல நூறு கோடி லாபம் பார்க்கும் லியோ.. மொத்த பிசினஸை பார்த்து நெஞ்சுவலி வந்துரும் போல!

Leo Pre-Release Business: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய காத்திருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் படத்திருக்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்க திட்டமிட்டுள்ளனர். படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே படத்தின் பிரீ பிசினஸை பார்த்தால் பலருக்கும் நெஞ்சு வலியே வந்துவிடும்.

அந்த அளவிற்கு 386 கோடியை லியோ படம் ப்ரீ பிசினஸில் லாபம் பார்த்திருக்கிறது. இன்னும் தமிழகத்தின் தியேட்டரிகள் ரைட்ஸ் மட்டும் விற்கப்படாமல் இருக்கிறது. அது மட்டும் விற்று விட்டால் நிச்சயம் 500 கோடியை தொட்டு விடும். அதற்கு தான் இப்போது கடும் போட்டியே நிலவிக் கொண்டிருக்கிறது. லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் மொத்தமாக 230 கோடியை கொடுத்து வாங்கி இருக்கிறது.

ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் 16 கோடி கொடுத்தும், ஹிந்தியில் லியோ படத்தை வெளியிடும் உரிமையை கோல்ட் மைன்ஸ் நிறுவனம் 28 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை பாரிஸ் நிறுவனம் 60 கோடி கொடுத்தும் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ளது. இதைத் தவிர கேரளம் மற்றும் கர்நாடக வெளியீட்டு உரிமையையும் போட்டி போட்டு வாங்கி இருக்கின்றனர்.

கேரளாவில் லியோ படத்தின் வெளியிட்டு உரிமையை கோகுலம் பிரின்ஸ் நிறுவனம் 16 கோடி கொடுத்தும், கர்நாடகாவில் 15 கோடி கொடுத்து 2 பார்ட்டீஸ் வாங்கி உள்ளனர். தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் 21 கோடியை கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இவ்வாறு ஒட்டு மொத்தமாக ரிலீசுக்கு முன்பே லியோ 386 கோடி ப்ரீ பிசினஸ் ஆகியிருக்கிறது. இதில் தமிழகத்தில் யார் டிஸ்ட்ரிபியூஷன் செய்யப் போகிறார் என்பது மட்டும் இன்னும் சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. பிற மாநிலங்களிலேயே பல கோடிக்கு வியாபாரமான லியோ தமிழகத்திலும் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே வியாபாரம் ஆகும்.

அது மட்டும் தெரிந்தால் நிச்சயம் லியோவின் பிரீ பிசினஸ் 500 கோடியை கடந்து விடும். எனவே ரிலீசுக்கு முன்பே ப்ரீ பிசினஸை பார்த்த பலருக்கும் நெஞ்சுவலியே வந்து விடுவது போல் இருக்கிறது. இந்த படத்திற்கு இந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருப்பதால், நிச்சயம் ரிலீசுக்கு பின்பு 1000 கோடி வசூலை அசால்ட் ஆக தட்டி தூக்கி விடும் என திரை விமர்சகர்கள் கணித்திருக்கின்றனர்.