புதன்கிழமை, ஜனவரி 1, 2025

15 வினாடியில் தீர்ந்து போன இலவசம்.. மோசடி கும்பலுக்கே டஃப் கொடுக்கும் சன் பிக்சர்ஸ், கூட்டு சேர்ந்த நெல்சன்

Sun Pictures: சன் நெட்வொர்க்கிங் துணை நிறுவனமான சன் பிக்சர்ஸ் டாப் நடிகர்களின் படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தும் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்திற்கு என்று ஒரு தனி பெயர் இருக்கும் நிலையில், அதையெல்லாம் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு படுமோசமாக மோசடி வேலையை செய்து இருக்கிறது.

இதற்கு இயக்குனர் நெல்சன் திலீப் குமாரும் கூட்டு சேர்ந்து இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் நூதன முறையில் ஊழல் நடந்திருப்பது ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறது.

Also Read: மாற்றுத்திறனாளியாக மாஸ் ஹீரோக்கள் பண்ணிய கதாபாத்திரங்கள்.. ‘கெட்ட பையன் சார் இந்த காளி’ என சூப்பர் ஸ்டார் முறுக்கிய படம்

ஏனென்றால் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது. இதற்காக 1000 பேருக்கு இலவசமாக அனுமதி சீட்டை வழங்க பட குழு முடிவெடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதனால் 500 பேருக்கு தலா இரண்டு அனுமதி சீட்டுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக குறிப்பிட்ட இணையதளத்தில் இன்று மதியம் 1 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இதனால் இன்று 1 மணி அளவில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் அடித்து பிடித்து முன்பதிவு செய்தனர்.

Also Read: பாட்டுல இல்ல நேரிலேயே ரஜினி பதிலடி கொடுக்க நேரம் வந்துருச்சு.. இளைய தளபதிக்கு ஆப்படிக்கும் நாள்

ஆனால் தயாரிப்பு நிறுவமான சன் பிக்சர்ஸ் அடுத்த நிமிடமே 1000 டிக்கெட்டும் விற்று போனது என்று போஸ்டரை தயார் செய்தது தங்களது அதிகார ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். இந்த போஸ்டரில் வெறும் 15 வினாடியில் ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதனுடன், ‘இவன் ட்ரெண்ட்டை மாத்தி வைப்பான். அலப்பறைய கூட்டி வைப்பான்’ என்ற கமெண்ட்டையும் டேக் செய்தனர். இதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், ‘இவ்வளவு கேவலமாக வா நடந்து கொள்வது, மோசடி கும்பலுக்கே சன் பிக்சர்ஸ் நிறுவனம் டஃப் கொடுத்து விடுவார்கள் போல’ என்றும் கடுமையாக சோசியல் மீடியாவில் விமர்சிக்கின்றனர். இவர்கள் மட்டுமல்ல படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரும் சேர்ந்து கொண்டு தான் இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கிறார் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.

Also Read: இந்த கிளம்பிட்டாங்கல்ல கோர்ட்டு கேஸ்னு.. சூப்பர் ஸ்டாரை பத்தி பாட்டு பாடுனது குத்தமாயா.?

Trending News