Super Star Rajinikanth: கடந்த சில வருடங்களாக சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தமிழ் சினிமாவில் பயங்கர போட்டியாக இருக்கிறது. அதிலும் தற்போது யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வசூல் ரீதியாக அடித்துக் கொள்ளும் அளவுக்கு சூழல் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு மட்டும்தான் இத்தனை டிமாண்ட் என்று பார்த்தால் அவருடைய படத்தின் டைட்டிலுக்கும் போட்டி தான் நடந்திருக்கிறது. ரஜினி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 10 படங்களின் டைட்டில்களை மீண்டும் தங்களுடைய படங்களுக்கு வைத்திருக்கிறார்கள் இந்த நடிகர்கள்.
ரஜினி ஆக்சன் ஹீரோவாக கலக்கிய திரைப்படம் முரட்டுக்காளை. இதே கதையை கொஞ்சம் இந்த காலத்திற்கு ஏற்ப மாற்றி நடிகர் சுந்தர் சி நடித்திருந்தார். அந்த படத்திற்கும் முரட்டுக்காளை என்றுதான் பெயரிடப்பட்டது. அதேபோன்று ரஜினிகாந்த் காமெடியில் கலக்கிய தில்லுமுல்லு திரைப்படத்தை ரீமேக் செய்து அதில் மிர்ச்சி சிவா நடித்திருந்தார். இந்த படத்திற்கு தில்லு முல்லு என பெயரிடப்பட்டது.
Also Read:ரஜினியை ஒருமையில் பேசி வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை.. உங்க வயசுக்குன்னு ஒரு மட்டு மரியாதை இல்லையா!
சமீபத்தில் அடுத்த ரஜினி சிவகார்த்திகேயன் தான் என்று அவருடைய படை இசை வெளியீட்டு விழாவின் பொழுது கொளுத்தி போடப்பட்டது. பின்னர் எளிமைக்காக தான் அப்படி சொன்னோம் என்று சொன்ன பிரபலங்கள் எல்லாம் ஜகா வாங்கி விட்டார்கள். சிவகார்த்திகேயன் தன்னுடைய பங்குக்கு மாவீரன் மற்றும் வேலைக்காரன் என்ற இரண்டு பட டைட்டில்களை தன்னுடைய படத்துக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் தான் கழுகு. இதே பட டைட்டிலை வைத்து நடிகர் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவியின் நடிப்பில் படம் ரிலீஸ் ஆனது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் கழுகு 2 என்னும் பெயரிலும் எடுக்கப்பட்டது. ஆனால் இது எதிர்பார்த்த வெற்றி அடையாமல் தோல்வியை தழுவியது.
Also Read:பாட்டுல இல்ல நேரிலேயே ரஜினி பதிலடி கொடுக்க நேரம் வந்துருச்சு.. இளைய தளபதிக்கு ஆப்படிக்கும் நாள்
இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு நடித்த ரஜினி நடித்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் தான் நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் சமூக அநீதிகளை தட்டி கேட்பதற்காக ரஜினி ராபின் ஹுட் என்னும் அவதாரத்தை எடுத்து இருப்பார். அதை கண்டுபிடிக்கும் காவல் அதிகாரியாக பாக்யராஜ் நடித்திருப்பார். இதே பெயரில் நடிகர் விஷால் மற்றும் லட்சுமிமேனன் நடிப்பில் 2014ஆம் ஆண்டு திரைப்படம் ரிலீஸ் ஆனது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனான திருமணத்திற்கு பிறகு தனுஷ், ரஜினி செண்டிமெண்ட்டை பயன்படுத்தி ரஜினி ரசிகர்களின் ஆதரவை பெற்றார். அதற்கு ஏற்றது போல் மாப்பிள்ளை, பொல்லாதவன், படிக்காதவன், தங்க மகன் என அடுத்தடுத்து ரஜினி பட டைட்டிலை உரிமையோடு எடுத்துக் கொண்டு படங்களை ரிலீஸ் செய்தார் தனுஷ்.
Also Read:ஒரு டேக்கில் நடிப்பதற்கு நான் என்ன கமலா.? இசையமைப்பாளரை வாயடைக்க வைத்த சூப்பர் ஸ்டார்