திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாகும் கவுண்டமணி.. அரசியல் டைட்டிலுடன் வெளியான போஸ்டர்

Actor Goundamani: 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கப் போகிறார். 80, 90களில் காமெடியில் தனி முத்திரை பதித்த கவுண்டமணி, 2016 ஆண்டு முதல் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார்.

காரணம் அவரது வயது முதிர்ச்சியின் காரணமாக பிடித்த படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 49-O படம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘வாய்மை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

Also Read: கவுண்டமணிக்கு எதிராக களம் இறக்கப்பட்ட காமெடி நடிகர்.. பயில்வான் சொன்ன சீக்ரெட்

அதன் பின் 2016 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இப்போது மறுபடியும் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி மீண்டும் கதாநாயகனாக ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஷாஷி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தை சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார். இதில் கவுண்டமணியுடன் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், தம்பி ராமையா, வையாபுரி, சிங்கம் புலி, முத்துக்காளை உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

Also Read: கவுண்டமணி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டாரு.. அண்ட புளுகு நடிகையின் முகத்திரையை கிழித்த பயில்வான்

இவர்கள் மட்டுமல்ல சிங்கமுத்துவின் மகன், நாகேஷின் பேரன் மற்றும் மயில்சாமியின் மகன் உள்ளிட்ட பிரபலங்களின் வாரிசுகளும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்கு ஹீரோவாக தயாராகிக் கொண்டிருக்கும் கவுண்டமணி அதற்கான லுக்குடன் டைட்டில் அடங்கிய போஸ்டரும் வெளியாகி உள்ளது.

கவுண்டமணி விதவிதமான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் தற்போது ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ஏற்கனவே காமெடியனாக இருந்து குணச்சித்திர வேடத்தில் மாமன்னனில் கலக்கிய வடிவேலுக்கு போட்டியாக கவுண்டமணி ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் சிறப்பாக நடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஹீரோவாகும் கவுண்டமணி

goundamani-next-movie-update
goundamani-next-movie-update

Also Read: கவுண்டமணியால் கேரியரை தொலைத்த 5 நடிகைகள்.. சப்பி போட்ட மாங்கொட்டையாய் தூக்கி எறிந்த காமெடி கிங்

Trending News